வேக கட்டுப்பாட்டை இழந்து மதிலுடன் மோதிய முச்சக்கரவண்டி... மனைவி உயிரிழப்பு. கணவர் படுகாயம். - Madawala News Number 1 Tamil website from Srilanka

வேக கட்டுப்பாட்டை இழந்து மதிலுடன் மோதிய முச்சக்கரவண்டி... மனைவி உயிரிழப்பு. கணவர் படுகாயம்.


வேக கட்டுப்பாட்டை இழந்து மதிலுடன் மோதிய முச்சக்கரவண்டி...  மனைவி உயிரிழப்பு. கணவர் படுகாயம்.

வவுனியா - முருகனூர் பகுதியில் இன்று இடம்பெற்ற விபத்தில் பெண் ஒருவர் பலியாகியுள்ளார்.

குறித்த பெண்ணும், அவரது கணவரும் சிதம்பரபுரம் நோக்கி முச்சக்கரவண்டியில் சென்று கொண்டிருந்த போது வேக கட்டுப்பாட்டை இழந்து மதிலுடன் மோதியதில் குறித்த விபத்து இடம்பெற்றுள்ளது.

இதன்போது விபத்தில் காயமடைந்த கணவன் மற்றும் மனைவி நோயாளர் காவு வண்டி மூலம் வவுனியா வைத்தியசாலையில் அனுமதிக்கபட்ட நிலையில், சிகிச்சை பலனின்றி மனைவி உயிரிழந்துள்ளார்.

குறித்த விபத்தில் வவுனியா, முருகனூர் பகுதியைச் சேர்ந்த தர்சினி வயது 25 என்ற பெண்ணே உயிரிழந்துள்ளார்.

இவர்கள் இருவருக்கும் கடந்த இரு தினங்களிற்கு முன்னரே திருமணம் இடம்பெற்றமை குறிப்பிடத்தக்கது.

விபத்து தொடர்பான மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
வேக கட்டுப்பாட்டை இழந்து மதிலுடன் மோதிய முச்சக்கரவண்டி... மனைவி உயிரிழப்பு. கணவர் படுகாயம். வேக கட்டுப்பாட்டை இழந்து மதிலுடன் மோதிய முச்சக்கரவண்டி...  மனைவி உயிரிழப்பு. கணவர் படுகாயம். Reviewed by Madawala News on February 14, 2020 Rating: 5