இன்று விசாரணைக்கு வந்த அப்துர் ராஸிக்கு எதிராக பொது பல சேனாவினால் பதிவு செய்யப்பட்ட வழக்கு .


CTJ அப்துர் ராஸிக்கு எதிராக பொது பல சேனாவினால் பதிவு
 செய்யப்பட்ட வழக்கு ஜூலை 07ம் திகதிக்கு ஒத்திவைப்பு

முஸ்லிம் உரிமைகளை மீட்டெடுப்போம் என்ற தலைப்பில்  அப்துர் ராஸிக் பேசிய உரைக்கெதிராக பொது பல சேனா அமைப்பினால் பதிவு செய்யப்பட்ட மத நிந்தனை வழக்கு இன்று (14.02.2020) கொழும்பு மேல் நீதி மன்ற நீதிபதி லங்கா ஜயரத்ன முன்னிலையில் விசாரனைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.


வழக்கு மீண்டும் எதிர்வரும் ஜூலை மாதம் 03ம் திகதிக்கு ஒத்திவைக்கப்பட்டதுடன், அடுத்த வழக்கின் தவணை வரை சகோ. அப்துர் ராஸிக் வெளிநாடு செல்வதற்க்கு விதிக்கப்பட்டிருந்த தடையும் நீக்கப்பட்டது.

இன்றைய வழக்கு விசாரனைக்கு சிலோன் தவ்ஹீத் ஜமாஅத் - CTJ சார்பில் சிரேஷ்ட சட்டத்தரணி ஷிராஸ் நூர்தீன், நுஷ்ரா ஸரூக் உள்ளிட்ட குழுவினர் மன்றில் ஆஜராகினர்.

ஊடகப் பிரிவு,
சிலோன் தவ்ஹீத் ஜமாஅத் - CTJ
இன்று விசாரணைக்கு வந்த அப்துர் ராஸிக்கு எதிராக பொது பல சேனாவினால் பதிவு செய்யப்பட்ட வழக்கு . இன்று விசாரணைக்கு வந்த அப்துர் ராஸிக்கு எதிராக பொது பல சேனாவினால் பதிவு செய்யப்பட்ட வழக்கு . Reviewed by Madawala News on February 14, 2020 Rating: 5