75 மில்லியன் ரூபாவுக்கும் அதிக வருமானங்களும் சொத்துக்களும் சேகரிக்கப்பட்டதாக தாக்கல் செய்யப்பட்ட வழக்கு இன்று விசாரணைக்கு வந்தது.


சட்ட விரோதமான முறையில் வருமானங்களும் சொத்துக்களும் ஈட்டியுள்ளமைக்கு எதிராக அமைச்சர்
விமல் வீரவன்சவுக்கு எதிராக இலஞ்ச ஊழல் ஆணைக்குழுவினால் தாக்கல் செய்யப்பட்டுள்ள வழக்கு விசாரணைக்கான திகதி இன்று (12) கொழும்பு மேல் நீதிமன்றத்தால் அறிவிக்கப்பட்டுள்ளது.

அதன்படி, குறித்த வழக்கு இன்று (12) கொழும்பு மேல் நீதிமன்ற நீதிபதி பிரதீப் ஹெட்டியாராச்சி முன்னிலையில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.

இதன்போது குறித்த வழக்கை செப்டம்பர் மாதம் 07 ஆம் திகதி மற்றும் 09 ஆம் திகதிகளில் விசாரணைக்கு உட்படுத்தவுள்ளதாக நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.

இதன்போது, சாட்சியம் வழங்குவதற்காக நீதிமன்றில் முன்னிலையாகுமாறு சாட்சியாளர்களுக்கு அழைப்பாணை வௌியிடப்படுவதாக மேல் நீதிமன்ற நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.

2010 ஆம் ஆண்டு ஜனவரி 01 ஆம் திகதி முதல் 2014 ஆம் ஆண்டு டிசம்பர் 31 ஆம் திகதி வரையான காலப்பகுதியில் அமைச்சராக கடமையாற்றிய விமல் வீரவன்சவின் சட்டரீதியான வருமானத்தை தாண்டி 75 மில்லியன் ரூபாவுக்கும் அதிக வருமானங்களும் சொத்துக்களும் சேகரிக்கப்பட்டுள்ளதாகவும் அவை வருமானங்கள் மற்றும் சொத்துக்கள் சட்டத்தின் கீழ் தண்டனைக்குறிய குற்றம் எனவும் இலஞ்ச ஊழல் ஆணைக்குழுவினால் கொழும்பு மேல் நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
75 மில்லியன் ரூபாவுக்கும் அதிக வருமானங்களும் சொத்துக்களும் சேகரிக்கப்பட்டதாக தாக்கல் செய்யப்பட்ட வழக்கு இன்று விசாரணைக்கு வந்தது. 75 மில்லியன் ரூபாவுக்கும் அதிக வருமானங்களும் சொத்துக்களும் சேகரிக்கப்பட்டதாக தாக்கல் செய்யப்பட்ட வழக்கு இன்று விசாரணைக்கு வந்தது. Reviewed by Madawala News on February 12, 2020 Rating: 5
'; (function() { var dsq = document.createElement('script'); dsq.type = 'text/javascript'; dsq.async = true; dsq.src = '//' + disqus_shortname + '.disqus.com/embed.js'; (document.getElementsByTagName('head')[0] || document.getElementsByTagName('body')[0]).appendChild(dsq); })();
Powered by Blogger.