காலநிலை மாற்றத்தை எதிர்த்து போராட உலகின் நம்பர் 1 பணக்காரர் $10 Billion நிதியுதவி.


ஒலுவில் எம்.ஜே.எம் பாரிஸ்
உலகின் முதல் பணக்காரரும் , இ-கொமர்ஸ் ஜாம்பாவானும்,  அமேசான் நிறுவனத்தின்
தலைவருமான ஜெப் பெசோஸ் காலநிலை மாற்றத்தை எதிர்த்து போராட  $10 Billion ( சுமார் ஒரு லட்சத்தி 80 ஆயிரம் கோடி ரூபா )  நிதியுதவி வழங்குவதாக தெரிவித்துள்ளார்.



இது குறித்து  ஜெப் போஸெஸின் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் கூறியிருப்பதாவது:-

‘பெசோஸ் ஏர்த் பண்ட்’ ( Bezos Earth Fund ) தொடங்குவதை அறிவிப்பதில் மகிழ்ச்சியடைகிறேன். காலநிலை மாற்றம் என்பது பூமிக்கு மிகப்பெரிய அச்சுறுத்தலாகும். காலநிலை மாற்றத்தை எதிர்த்து போராடுவதற்கான தெரிந்த வழிகளை அதிகரிக்கவும், புதிய வழிகளை ஆராயவும் மற்றவர்களுடன் இணைந்து பணியாற்ற விரும்புகிறேன்.

நான் இந்த திட்டத்தை தொடங்குவதற்கு  $10 Billion ( சுமார் ஒரு லட்சத்தி 80 ஆயிரம் கோடி ரூபா ) செலவிடுகிறேன். விஞ்ஞானிகள், தன்னார்வ தொண்டு நிறுவனங்கள்  மற்றும் பிற குழுக்களின் செயல்பாடுகளுக்கு இந்த நிதி உதவும். பூமி என்பது நம் அனைவருக்கும் பொதுவானது. அதை நாம் ஒன்றாக பாதுகாப்போம்.
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.


அவருடைய  பூமி மீதுள்ள பற்றுக்கும், பெருந்தன்மைக்கு பலரும் சமூக வலைதளங்களில் பாராட்டுகளையும், வாழ்த்துக்களையும் கூறி வருகின்றனர்.
காலநிலை மாற்றத்தை எதிர்த்து போராட உலகின் நம்பர் 1 பணக்காரர் $10 Billion நிதியுதவி. காலநிலை மாற்றத்தை எதிர்த்து போராட உலகின் நம்பர் 1 பணக்காரர் $10 Billion நிதியுதவி. Reviewed by Madawala News on February 19, 2020 Rating: 5
'; (function() { var dsq = document.createElement('script'); dsq.type = 'text/javascript'; dsq.async = true; dsq.src = '//' + disqus_shortname + '.disqus.com/embed.js'; (document.getElementsByTagName('head')[0] || document.getElementsByTagName('body')[0]).appendChild(dsq); })();
Powered by Blogger.