இந்த வருடத்தில் நிகழவுள்ள முதலாவது சந்திர கிரகணம் Wolf Blood Moon Eclipse பற்றி ... - Madawala News Number 1 Tamil website from Srilanka

இந்த வருடத்தில் நிகழவுள்ள முதலாவது சந்திர கிரகணம் Wolf Blood Moon Eclipse பற்றி ...


இந்த வருடத்தின் முதலாவது சந்திர கிரகணம் இன்று நிகழவுள்ளது. பொதுவாக வருடத்தின்
ஆரம்பத்தில் வரும் முழு நிலவு Wolf Moon என்றும், கிரகணத்தின் போதுள்ள முழு நிலவு Blood Moon எனவும் அழைக்கப்படும். எனவே இந்த கிரகணம் Wolf Blood Moon Eclipse என்றழைக்கப்படுகிறது.

பூமியின் நிழல் சந்திரனை மறைப்பதாலேயே சந்திர கிரகணம் ஏற்படுகின்றது. பூமி சந்திரனை மறைக்கின்ற விதத்தினை பொறுத்து சந்திர கிரகணம் மூன்று வகைப்படும்.

சந்திரனானது சூரியன்-பூமி என்பவற்றின் நேர்கோட்டில் பூமிக்கு பின்னால் அதன் நிழலில் மறைந்திடும் போது இரண்டு வகையான கிரகணங்கள் தோன்றுகின்றன. சந்திரன் சில வேளை பூமிக்கு அருகிலும், சில வேளை பூமிக்கு தொலைவிலும் பயணிப்பதை அறிந்திருப்பீர்கள்.

சந்திரன் பூமிக்கு அருகில் இருக்கும் போது பூரண சந்திர கிரகணம் ஏற்படுகின்றது. சந்திரன் பூமியை விட்டு தூரமாய் இருக்கும் போது பூமியின் நிழல் சந்திரனை முழுவதுமாய் மறைக்க போதுமானதாய் இருப்பதில்லை. இதனால் வளைய வடிவ சந்திர கிரகணம் ஏற்படுகின்றது.

ஆனால் சந்திரன் இந்த நேர் கோட்டில் இல்லாமல் சற்று விலகி இருக்கும் போது பூமியின் புற நிழல் மறைப்பதால் மூன்றாவது வகை கிரகணம் தோன்றுகின்றது. புற நிழல் என்பது சிதறிச் செல்லும் நிழல். இந்த வகை கிரகணங்களின் வடிவங்கள் தெளிவற்றவை என்பதோடு பகுதியானவை.

இந்த மூன்றாம் வகையான பகுதி சந்திர கிரகணம்தான் இன்று இரவு ஏற்பட இருக்கின்றது. அதாவது இன்றிரவு ரொம்ப தெளிவாக சந்திரனில் பூமியின் நிழலை காண முடியாது. 

இன்றிரவு இலங்கையில் 10.39இற்கு ஆரம்பிக்கும் இக்கிரகணம் நள்ளிரவு 12.40இற்கு உச்சத்தினை அடைகின்றது. பின்னர் படிப்படியாக குறைவடைந்து 02.40இற்கு முழுவதுமாய் விலகுகின்றது.

மொத்தமாய் 04 மணித்தியாலங்கள் ஒரு நிமிடம் 47 செக்கன்கள் நீடிக்கும் இந்த கிரகணம் உலகில் பிரதானமாக ஐரோப்பா, ஆபிரிக்கா, ஆசியா, அவுஸ்திரேலியா போன்ற பகுதிகளில் அவதானிக்க கூடியதாய் இருக்கும்.

ஷியான் யாக்கூப்
இந்த வருடத்தில் நிகழவுள்ள முதலாவது சந்திர கிரகணம் Wolf Blood Moon Eclipse பற்றி ... இந்த வருடத்தில் நிகழவுள்ள  முதலாவது சந்திர கிரகணம் Wolf Blood Moon Eclipse பற்றி ... Reviewed by Madawala News on January 10, 2020 Rating: 5