சாய்ந்தமருது தற்கொலைத் தாக்குதலில் பலியான - சாராவின் DNA சான்றிதலால் குழப்பம்சாய்ந்தமருது தற்கொலைத் தாக்குதலில் கொல்லப்பட்டதாக கூறப்படும் 16 பேரின் DNA உடன், 
சாரா எனப்படும் புலஸ்தினி மகேந்திரன் என்பவரின் DNA பொருந்தவில்லை எனத் தகவல் வெளியாகியுள்ளது.

உயிர்த்த ஞாயிறுத் தாக்குதலுடன் தொடர்புடைய சந்தேகத்தின் பேரில் கைதான 12 பேர்,  கல்முனை நீதவான் நீதிமன்றில் இன்று முன்னிலைப்படுத்தப்பட்டிருந்தனர்.

அவர்கள் மீதான விசாரணையின் போது, மன்றில் முன்னிலையான விசேட குற்றவியல்  பிரிவின் அதிகாரி, சாய்ந்தமருது தற்கொலைத் தாக்குதலில் கொல்லப்பட்டதாக கூறப்படும் 16 பேரின் DNA உடன்,  சாரா எனப்படும் புலஸ்தினி மகேந்திரன் என்பவரின் DNA பொருந்தவில்லை என்பதை நீதிமன்றின் கவனத்திற்கு கொண்டு வந்தார்.

இதனையடுத்து, அம்பாறை மாவட்டம் - சாய்ந்தமருது பிரதேசத்தில் இடம்பெற்ற குண்டுத்தாக்குதலில் மரணமடைந்தவர்களின் மரபணு பரிசோதனை அறிக்கையை எதிர்வரும் பெப்ரவரி மாதம் 3 ஆம் திகதி மீண்டும் மன்றில் சமர்ப்பிக்குமாறு, தொடர்புடைய அதிகாரிகளுக்கு நீதிமன்ற உத்தரவு இன்று பிறப்பிக்கப்பட்டுள்ளது. 
சாய்ந்தமருது தற்கொலைத் தாக்குதலில் பலியான - சாராவின் DNA சான்றிதலால் குழப்பம் சாய்ந்தமருது தற்கொலைத் தாக்குதலில் பலியான - சாராவின் DNA சான்றிதலால் குழப்பம் Reviewed by Madawala News on January 21, 2020 Rating: 5