ஜனாதிபதியின் செயற்பாடுகள் வரவேற்கத் தக்கவை



ஜனாதிபதியின் செயற்பாடுகள் அனைத்தும் வரவேற்கத் தக்கதாக இருக்கிறது. ஆனால் அவருடைய
தேர்தல் தொடர்பான விஞ்ஞாபனத்தின் அறிக்கைக்கும், சில அமைச்சர்களின் நடவடிக்கைக்கும் எந்த தொடர்பும் இல்லாது இருக்கிறது என திருகோணமலை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் அப்துல்லா- மஃறூப் தெரிவித்தார்.

கிண்ணியாவில் நேற்று முன்தினம் (11) இடம்பெற்ற ஊடகவியலாளர்கள் நிகழ்வொன்றில் கலந்து கொண்டு உரையாற்றிய போதே மேற்கண்டவாறு கூறினார்.

அவர் தொடர்ந்தும் உரையாற்றுகையில்,

ஜனாதிபதி நேரடியாக மருத்துவமனைக்கு சென்று அங்குள்ள மக்களின் குறைபாடுகளை கேட்டறிந்து கொண்டார். அதே போன்று பல இடங்களுக்கும் சென்று வருகிறார்.

சிறிய கட்சிக்கு சந்தர்ப்பம் கிடைப்பதாக இருந்தால் 12.5 வீத வெட்டுப்புள்ளி 5 விதமாக குறைக்கப்பட வேண்டும் என நாங்கள் கலந்துரையாடினோம்.


இன்று விஜயதாச ராஜபக்க்ஷ ஒரு தேசியப் பட்டியல் உறுப்பினராக இருந்து கொண்டு பழைய முறைமைக்கு போகவேண்டும் என்று சொல்கின்றார். ஜே.வி.பி கட்சியைப் பொறுத்தவரையில் எந்தவொரு மாவட்டத்திலும் 5 விதத்தினை பெறவில்லை, அவ்வாறாக இருந்தால் எதிர்காலத்தில் ஜே.வி.பிக்கு ஒரு ஆசனம் கூட பெற முடியாத சூழ்நிலை உருவாகின்றது.

சிறுபான்மை கட்சிகள் குறிப்பாக முஸ்லிம்களைப் பொறுத்தவரையில் கிழக்கில் பெரும்பான்மை கட்சிகளாக இருந்தாலும் ஏனைய மாவட்டங்களில் மூன்று, நான்கு வீத வாக்குகளை பெற்று இருக்கின்றோம்.

இந்த அடிப்படையில் 5 வீத வெட்டுப்புள்ளிகள் குறைக்கப்பட வேண்டும். அதிகரிக்கக் கூடாது அவ்வாறு அதிகரிக்கப்பட்டால் இந்நாட்டில் நீண்டகாலமாக இருக்கின்ற சிறுபான்மை கட்சிகள் நேரடியாக பாதிக்கப்படும் என்றார்.

திருமலை மாவட்ட விசேட நிருபர்
ஜனாதிபதியின் செயற்பாடுகள் வரவேற்கத் தக்கவை ஜனாதிபதியின் செயற்பாடுகள் வரவேற்கத் தக்கவை  Reviewed by Madawala News on January 13, 2020 Rating: 5
'; (function() { var dsq = document.createElement('script'); dsq.type = 'text/javascript'; dsq.async = true; dsq.src = '//' + disqus_shortname + '.disqus.com/embed.js'; (document.getElementsByTagName('head')[0] || document.getElementsByTagName('body')[0]).appendChild(dsq); })();
Powered by Blogger.