கல்ஹின்னை இறைச்சிக் கடை பிரேரனை நிராகரிப்பு . - Madawala News Number 1 Tamil website from Srilanka

கல்ஹின்னை இறைச்சிக் கடை பிரேரனை நிராகரிப்பு .


(மொஹொமட் ஆஸிக்)
பூஜாபிட்டிய பிரதேச சபை எல்லைக்குட்பட்ட கல்ஹின்ன பிரதேசத்தில் புதிதாக மாட்டிறைச்சிக் கடை
ஒன்றுக்காக அனுமதி வழங்க வேண்டும் என்று பூஜாபிட்டிய  பிரதேச சபையின்  ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னனியின் உறுப்பினர் உவைஸ் ரஸான்  இன்று இடம் பெற்ற அதன பொதுக் கூட்டத்தில் முன் வைத்த பிரேரனை அனைத்து உறுப்பினர்களுடைய  எதிர்ப்பினால்  நிராகரிக்கப்பட்டது.


பூஜாபிட்டிய பிரதேச சபையின் தலைவர் அநுர பிரனான்து தலமையில்  இடம் பெற்ற இக் கூட்டத்தில்  இது தொடர்பாக  இருத்து  தெரிவிக்கையில்  கல்ஹின்னை பிரதேசத்தில் இரு மாட்டிறைச்சிக்  கடைகள் இருந்த போதும் அது போதுமானதாக இல்லை ஆகவே மேலும் ஒரு  இறைச்சிக் கடைக்கு அனுமதி வழங்க வேண்டும் என்று கேட்டுக் கொண்டார்.


ஐக்கிய தேசிய கட்சி உறுப்பினரும் எதிர்கட்சி தலைவருமான  எம்.பீ.ரம்சான் மொஹமட் கருத்து தெரிவிக்கையில்  நாட்டில் இன்று இருக்கின்ற சூழலில் மாட்டிறைச்சிக் கடைகளை மூடிவிட  ஆலோசனை நடாத்தப்பட்டுவரும் போது  புதிதாக இறைச்சிக் கடை திறப்பதற்கு பிரேரனை கொண்டு வருவது பொருத்தமற்றது என்று தெரிவித்தார்.


ஐக்கிய தேசிய கட்சி உறுப்பினர் எஸ்.எம்.கலீல் ,  இருத்து தெரிவிக்கையில் இந் நாட்டில் நாங்கள் அனைத்து மக்களுடன் ஒற்றுமையாக வாழ வேண்டும் என்றும் அதற்கு பாதகம் ஏற்படும் எவ்வித முன்னெடுப்புகளிலும் நாங்கள் ஈடுபட கூடாது என்றும்  தெரிவித்தார்.


உப தலைவரும் முஸ்லிம் காங்கிரஸ் உறுப்பினருமான  ஏ.எல்.எம். ரஸான்  கருத்து தெரிவிக்கையில்,  இப் பிரேரனை தற்போதைக்கு பொருத்தமற்றது என்றும் முடியுமானால்  இறைச்சிக் கடைகளை மூடிவிடுவதற்கு ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என்றும் தெரிவித்தார்.

2020 01 14 ஆஸிக்

கல்ஹின்னை இறைச்சிக் கடை பிரேரனை நிராகரிப்பு .  கல்ஹின்னை  இறைச்சிக் கடை பிரேரனை நிராகரிப்பு . Reviewed by Madawala News on January 14, 2020 Rating: 5