டெங்கு நோய் காரணமாக கர்பிணிப் பெண் ஒருவர் உயிரிழப்பு. - Madawala News Number 1 Tamil website from Srilanka

டெங்கு நோய் காரணமாக கர்பிணிப் பெண் ஒருவர் உயிரிழப்பு.


திருகோணமலை, கிண்ணியா பொலிஸ் பிரிவிற்கு உட்பட்ட கிண்ணியா-3, மாஞ்சோலை பிரதேசத்தில்
டெங்கு நோய் காரணமாக கர்பிணித் பெண் ஒருவர் உயிரிழந்துள்ளதாக கிண்ணியா பொலிஸார் தெரிவித்தனர்.

22 வயதான 8 மாத கர்பிணிப் பெண்ணே இவ்வாறு உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

வயிற்றில் உள்ள சிசு இறந்ததை தொடர்ந்து கிண்ணியா தள வைத்தியசாலையில் இருந்து திருகோணமலை பொது வைத்தியசாலைக்கு மாற்றிய நிலையில் இம் மரணம் நிகழ்ந்துள்ளதாக பொலிஸார் மேலும் தெரிவித்துள்ளனர்.

இறந்த பெண் மற்றும் 8 மாத சிசுவின் நல்லடக்கம் இன்று கிண்ணியாவில் இடம்பெற்றது.

-திருகோணமலை  கீத்- Derana
டெங்கு நோய் காரணமாக கர்பிணிப் பெண் ஒருவர் உயிரிழப்பு. டெங்கு நோய் காரணமாக கர்பிணிப் பெண் ஒருவர் உயிரிழப்பு. Reviewed by Madawala News on January 14, 2020 Rating: 5