அக்கரைப்பற்று வலயக்கல்வி அலுவலகம் முன்பாக ஆர்ப்பாட்டம்..! - Madawala News Number 1 Tamil website from Srilanka

அக்கரைப்பற்று வலயக்கல்வி அலுவலகம் முன்பாக ஆர்ப்பாட்டம்..!


(ஏ.எம்.றொஸான்)
ஒலுவில் அல்ஹம்றா பாடசாலையின் அதிபர் நீக்கத்துக்கு எதிராக பெற்றோர்களதும்
மாணவர்களதும் எதிர்ப்பினை தொடர்ந்து இரண்டு வாரகாலமாக கல்வி நடவடிக்கைகள் இடம்பெறாமல் உள்ளது. இவ்விடயத்தினை தொடர்ந்து பாடசாலை மாணவர்களின் எதிர்கால கல்வி கேள்விக்குறியாக காணப்படுகின்றது.

இந்த நிலையில் இது தொடர்பாக கடந்த நாட்களில் வலயக்கல்வி பணிப்பாளர் மற்றும் மாகாணக் கல்வி  செயலாளருக்கு அறிவித்தும் இதுவரைக்கும் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.

இதனை கண்டித்து அக்கரைப்பற்று வலயக்கல்வி அலுவலகம் முன்பாக பாடசாலை மாணவர்கள், பெற்றோர்கள் கவனயீர்ப்பு போராட்டம் ஒன்றினை இன்று காலை முன்னெடுத்தனர். இப்போராட்டத்தில் அதிகளவான பெற்றோர்கள் கலந்து கொண்டனர்.
அக்கரைப்பற்று வலயக்கல்வி அலுவலகம் முன்பாக ஆர்ப்பாட்டம்..! அக்கரைப்பற்று வலயக்கல்வி அலுவலகம் முன்பாக ஆர்ப்பாட்டம்..! Reviewed by Madawala News on January 16, 2020 Rating: 5