அரசியல் தலைவர்களே இனவாத வெறுப்பு உணர்வை விதைக்கின்றனர். - Madawala News Number 1 Tamil website from Srilanka

அரசியல் தலைவர்களே இனவாத வெறுப்பு உணர்வை விதைக்கின்றனர்.


இனவாத வெறுப்பு உணர்வை அரசியல்  தலைவர்களே அதிகம் விதைக்கின்றனர் என  கிழக்கு
மாகாண முன்னாள் முதல்வர் ஹாபிஸ் நஸீர் அஹமட் தெரிவிப்பு

'முஸ்லிம் பயங்கரவாத அச்சுறுத்தல் இருக்கின்ற நிலையில் தேசிய புலனாய்வு அதிகாரியாக முஸ்லிம் ஒருவரை ஏன் நியமித்தார்கள்,? தமிழ் பயங்கரவாத சூழல் இருந்த நேரத்தில் தமிழ் புலனாய்வு அதிகாரியை நியமித்திருந்தால் யுத்தத்தை முடித்திருக்க முடியுமா? என நாட்டில் சிறுபான்மையினரைக் குறிவைத்து நாடாளு மன்ற உறுப்பினர் சரத்பொன்சேகா பேசியிருப்பது இந்த நாட்டில் தலைவர்களே இனவாத வெறுப்புணர்வை விதைக்கின்றார்கள் என்பதற்கு முன்னுதாரணமாய் அமைந்துள்ளது என கிழக்கு மாகாண முன்னாள் முதலமைச்சர் ஹாபிஸ் நஸீர் அஹமட் தெரிவித்தார்.


நாடாளுமன்ற உறுப்பினர் சரத்பொன்சேகா நாடாளுமன்றத்தில் ஆற்றிய உரை குறித்து கருத்துத் தெரிவிக்கும் வகையிலேயே அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.


நாட்டில் சிறுபான்மையினரைக் குறிவைத்து சரத்பொன்சேகா பேசியிருப்பது இந்த நாட்டில் தலைவர்களே இனவாத வெறுப்புணர்வை விதைக்கின்றார்கள் என்பதற்கு முன்னுதாரணமாய் அமைந்திருக்கின்றது. சரத்பொன்சேகா ஜனாதிபதி வேட்பாளராக களத்தில் நின்றபோது அவருக்கு இந்த நாட்டில் வாழும் தமிழ், முஸ்லிம் மக்கள் தமது முழுமையான ஆதரவைத் தந்தார்கள்.


இந்த நடைமுறையானது நாட்டின் தலைவராக சிங்கள பௌத்தர் வரப்போகிறார் என்பதை தமிழ், முஸ்லிம் மக்கள் இனவாத வெறுப்போடு அணுகுவதில்லை என்ப தையே புலப்படுத்தி நிற்கின்றது இந்த நாட்டில் வாழும் எந்தவொரு சமூகத்தைச் சேர்ந்த மக்களும் பயங்கரவாதத்தையும், அழிவு நாசத்தையும் விரும்புவதில்லை.


ஆனால் பயங்கரவாத வன்முறைகளில் எல்லா சமூகங்களிலுமுள்ள ஒரு சிலர் விரும்பி அழிவு நாச வேலைகளில் ஈடுபடுகிறார்கள். அவர்களை சமூகம் அங்கீக ரிப்பதுமில்iலை – ஆதரவளிப்பதுமில்லை அதன் முன்னுதாரணமாகவே இலங்கையில் வாழும் சுமார் 20 இலட்சம் முஸ்லிம்களும் ஈஸ்டர் தாக்குதலில் ஈடுபட்ட சுமார் 65 பேரை அணி திரண்டு காட்டிக் கொடுத்தார்;கள்.


இந்த யதார்த்தத்தை அறியாமல் சரத் பொன்சேகா போன்றவர்கள் வெறுப்புப் பேச்சை விரும்பி விதைப்பது வெட்கக்கேடானதும் வேதனைக்குரியதுமாகும் பொறுப்புக் கூறாத வெறுப்புப் பேச்சுக்களுக்கு நாட்டு மக்கள் இனிமேலும் அதிக இழப்புக்களைச் சந்தித்து விலை கொடுக்க முடியாது – என்றார்.

அரசியல் தலைவர்களே இனவாத வெறுப்பு உணர்வை விதைக்கின்றனர்.  அரசியல்  தலைவர்களே இனவாத வெறுப்பு உணர்வை விதைக்கின்றனர். Reviewed by Madawala News on January 14, 2020 Rating: 5