தமிழ், சிங்களம், முஸ்லிம் ஆகிய இனங்கள் எந்தவித பேதமும் இன்றி ஒரே நாட்டில் பிறந்த இரட்டையர்களை போல வாழ வேண்டும் என்பதே எனது பிரார்த்தனை.


தமிழ், சிங்களம், முஸ்லிம் ஆகிய இனங்கள் எந்தவித பேதமும் இன்றி ஒரே நாட்டில் பிறந்த இரட்டையர்களை
போல ஒரு மனதாக சிந்திக்கும் அதேபோல் வாழும் இலங்கையர்களை காண்பதே தனது பிரார்தனை என பிரதமர் மஹிந்த ராஜபக்ஸ தெரிவித்துள்ளார்.

இலங்கை இரட்டையர்கள் சங்கம் கொழும்பு சுகததாச உள்ளக அரங்கில் இன்று (20) நடத்திய நிகழ்வில் கலந்துக்கொண்டு உரையாற்றிய போதே பிரதமர் இதனை கூறியுள்ளார்.

ஒரு தாய் வயிற்றில் பிறந்து ஒரே நேரத்தில் இந்த உலகை கண்ட 25 இரட்டையர்களுடன் 1996 ஆம் ஆண்டு உருவான இந்த சங்கத்தில் தற்போது 2800 இரட்டையர்கள் அங்கம் வகிக்கின்றனர்.

8004 இரட்டையர்களை ஒன்றிணைத்து இந்தியாவில் நடத்திய நிகழ்வே இதுவரை கின்னஸ் சாதனையாக இருந்தது.

ஆனால் இன்று நடைபெற்ற நிகழ்வில் 12492 இரட்டையர்கள் பங்கேற்றனர்.

நிகழ்வில் தொடர்ந்தும் உரையாற்றிய பிரதமர், இவ்வாறு இரட்டையர்களை ஒரே நிகழ்வில் பங்குபெற செய்தமையை எண்ணி நான் மகிழ்ச்சியடைகின்றேன்.

இந்த இரட்டையர்களில் தமிழ், சிங்களம், முஸ்லிம் மற்றும் பேர்கர் ஆகிய இனங்களை சேர்ந்தவர்கள் உள்ளனர்.

எந்த இனமானாலும் இரட்டையர்களை போல் சிங்திக்கும், வாழும் மக்களை உருவாகும் நாளை காண்பதே எனது பிரார்தனையாகும்.

பிள்ளைகளே எமக்குள்ள ஒரே செல்வம். அதேபோல் குடும்பம் ஒன்றில் இரட்டையர்கள் பிறந்தால் அவர்களை வளர்ப்பதற்கு அவர்களது பெற்றோர் கடும் பிரயத்தனம் எடுக்க வேண்டும்.

இரட்டையர்கள் பிறந்தார்கள் என்பதற்காக வருமானம் இரட்டிப்பாகது மாறாக பொறுப்புகள் இரட்டிப்பாகும்.

எனவே இவ்வாறான இரட்டை பிள்ளைகளை வளர்தெடுத்த பெற்றோரை நான் பாராட்டுகின்றேன்.

இந்த நிறுவனம் இரட்டையர்களை பயன்படுத்தி நாட்டின் பால் சுற்றுலா பயணிகளை ஈர்க்க முயற்சிக்கின்றது. அதன் காரணமாகவே இரட்டையர்கள் எப்போதும் நாட்டுக்காக ஒற்றுமையாய் இருப்பார்கள் என நான் கூறினேன்.

அரசாங்கம் என்ற வகையில் இரட்டையர்களுக்கு விதிக்கப்பட்டுள்ள சட்டதிட்டங்களுக்கு அப்பாற் சென்று செயற்பட வேண்டும். அதனால் இரட்டையர்களின் மனோநிலைமை தொடர்பில் அரசாங்கம் முக்கிய கவனம் செலுத்த வேண்டும்.

பொது ஜன முன்னணி. ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி, சமசமாஜ கட்சி, கமினியூஸ்ட் கட்சி ஆகியன நாட்டுக்காக ஒன்றிணைந்துள்ளன.

ஆனால் சில கட்சிகளின் பெயரை சொல்லும் போது அவர்கள் சர்வாதிகாரிகள் என்பது புலப்படும்.

அவர்கள் ஆட்சிக்கு வந்தால் நாட்டை விற்பார்கள், நாட்டை பிளவுப்படுத்துவார்கள் என மக்கள் கூறுகின்றனர். ஆனபடியால் தேசிய இரட்டையர் தினத்தை பிரகடனப்படுத்துமாறு கேட்டுள்ளேன. அதற்காக பின்பற்ற வேண்டிய நடைமுறைகளை பின்பற்ற எதிர்பார்த்துள்ளேன்.

இந்த இரட்டையர் சங்கம் 200 மில்லியன் ரூபா பெறுமதியான மரக்கன்றுகளை நடும் வேலைத்திட்டம் ஒன்றை நடைமுறைப்படுத்தவுள்ளது.

உலகம் புவி வெப்பமடைதலால் பாரிய பிரச்சினைகளை எதிர்நோக்கியுள்ள இந்த வேளையில் இந்த மரநடுகை திட்டம் தூரநோக்கோடு முன்னெடுக்கப்படவுள்ளது.

இந்த கைங்கரியம் வெற்றியடைய வேண்டும் என்பதோடு ஒன்றாய் பிறந்தது போல் நாட்டுக்காக ஒன்றாய் செயற்பட வேண்டும் எனவும் பிரார்த்திக்கின்றேன் என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
தமிழ், சிங்களம், முஸ்லிம் ஆகிய இனங்கள் எந்தவித பேதமும் இன்றி ஒரே நாட்டில் பிறந்த இரட்டையர்களை போல வாழ வேண்டும் என்பதே எனது பிரார்த்தனை. தமிழ், சிங்களம், முஸ்லிம் ஆகிய இனங்கள் எந்தவித பேதமும் இன்றி ஒரே நாட்டில் பிறந்த இரட்டையர்களை போல வாழ வேண்டும் என்பதே எனது பிரார்த்தனை. Reviewed by Madawala News on January 21, 2020 Rating: 5
'; (function() { var dsq = document.createElement('script'); dsq.type = 'text/javascript'; dsq.async = true; dsq.src = '//' + disqus_shortname + '.disqus.com/embed.js'; (document.getElementsByTagName('head')[0] || document.getElementsByTagName('body')[0]).appendChild(dsq); })();
Powered by Blogger.