பயிற்­றுநர் பக்கீர் அலிக்கு கடைசி வாய்ப்பு வழங்கப்பட்டது.


இலங்கை கால்­பந்­தாட்ட அணியை முன்­னேற்­றப்­பா­தையில் இட்டுச் செல்­ல­மு­டி­யாமல் பலத்த சவா­லையும்
விமர்­ச­னங்­க­ளையும் எதிர்­நோக்­கி­வரும் தலைமைப் பயிற்­றுநர் நிஸாம் பக்கீர் அலிக்கு, சிறந்த பெறு­பெ­று­களைப் பெற்­று­வ­தற்­கான கடைசி வாய்ப்பு ஒன்று வழங்­கப்­பட்­டுள்­ளது.



2022 உலகக் கிண்ணம் மற்றும் 2021 ஆசிய கிண்ணம் ஆகி­ய­வற்­றுக்­கான இணை தகு­திகாண் போட்­டி­க­ளிலும் மோச­மான பெறு­பே­று­களை சந்­தித்த அவ­ரது பயிற்­று­விப்­பி­லான இலங்கை அணி, இம் மாதம் பங்­க­ளா­தேஷில் நடை­பெ­ற­வுள்ள பங்­க­பந்து தங்கக் கிண்ண கால்­பந்­தாட்டப் போட்­டியில் பங்­கு­பற்­று­கின்­றது.

இப் போட்டி எதிர்­வரும் 15ஆம் திகதி ஆரம்­ப­மா­கின்­றது. ஏ குழுவில் பலஸ்­தீனம், பங்­க­ளாதேஷ் ஆகிய அணி­க­ளுடன் இலங்கை மோத­வுள்­ளது.இந்தப் போட்­டியில் அவர் எத்­த­கைய பெறு­பே­று­களை ஈட்­டிக்­கொ­டுத்­தாலும் அவ­ரது பயிற்­றுநர் பதவிக் காலம் எதிர்­வரும் மார்ச் மாதத்­துடன் முடி­வுக்கு வரும் எனவும் வெளி­நாட்டுப் பயிற்­று­நர்கள் குழாம் நிய­மிக்­கப்­படும் எனவும் இலங்கை கால்­பந்­தாட்ட சம்­மே­ளனத் தலைவர் அநுர டி சில்வா தெரி­வித்தார்.

உலகக் கிண்ண மற்றும் ஆசிய கிண்ண தகு­திகாண் போட்டி ஜூன் மாதம் 4ஆம் திக­தி­யுடன் நிறை­வ­டை­ய­வுள்­ளது அப்­போது புதிய பயிற்­று­ந­ரின்கீழ் இலங்கை அணி பயிற்சி பெறும் என்றார் அவர்;.இலங்கை தேசிய அணியின் வீழ்ச்­சிக்கு வீரர்கள் கார­ணமா? பக்கீர் அலியின் பயிற்­று­விப்பு கார­ணமா? என்­பதை இலங்கை கால்­பந்­தாட்ட சம்­மே­ளன அதி­கா­ரிகள் தெளி­வு­ப­டுத்த தயங்­கு­கின்­றனர். எனினும் பக்கீர் அலியின் பிடி­வாதப் போக்கே இலங்கை அணியின் வீழ்ச்­சிக்கு காரணம் என கால்­பந்­தாட்ட அணி முகா­மைத்­து­வத்­துடன் தொடர்­பு­பட்­டி­ருந்த அதி­காரி ஒருவர் குறிப்­பிட்டார்.

இலங்கை கால்­பந்­தாட்ட அணியின் பயிற்­று­ந­ராக பக்கீர் அலி 2018 பெப்­ர­வரி மாதம் பதவி ஏற்ற பின்னர் கடந்த வருட இறு­தி­வரை இலங்கை விளை­யா­டிய 23 போட்­டி­களில் ஒன்றில் மாத்­தி­ரமே வெற்­றி­பெற்­றுள்­ளது.நான்கு போட்­டி­களை வெற்­றி­தோல்­வி­யின்றி முடித்­துக்­கொண்ட இலங்கை, ஏனைய போட்­டி­களில் தோல்­வி­களைத் தழு­வி­யது. இந்த 23 போட்­டி­களில் 5 கோல்­களை மாத்­தி­ரமே போட்­டுள்ள இலங்கை, எதி­ர­ணி­க­ளுக்கு 62 கோல்­களை விட்­டுக்­கொ­டுத்­துள்­ளது.

மேலும் ஒரு வருட கால­மாக குழாத்தில் இடம்­பெற்று பயிற்­சியில் ஈடு­பட்­டு ­வந்த சில வீரர்­களை அவர்­களில் ஆற்றல் இல்லை எனத் தெரி­வித்து நீக்­கி­யி­ருந்தார்.இலங்­கையின் முன்னாள் தேசிய வீர­ரான பின்­க­ளத்­திலும் மத்­தி­ய­க­ளத்­திலும் அபார ஆற்­றல்­களை வெளிப்­ப­டுத்­தி­யதை யாராலும் மறுக்­கவோ மறக்­கவோ முடி­யாது. அத்­துடன் பங்­க­ளா­தேஷில் ஒரு சிறந்த கழக மட்ட வீர­ரா­கவும் பயிற்­று­ந­ரா­கவும் பங்­க­ளா­தே­ஷி­யர்­களால் போற்றிப் புக­ழப்­பட்ட பக்கீர் அலி­யினால் இலங்கை அணியை முன்­னேற்­றப்­பா­தைக்கு இட்­டுச்­செல்ல முடி­யாமல் போனமை வியப்­புக்­கு­ரி­ய­தாகும்.

இந்­நி­லையில் அடுத்த தெற்­கா­சிய விளை­யாட்டு விழா கால்­பந்­தாட்டப் போட்­டியை இலக்கு வைத்து வெளி­நாட்டு பயிற்­றுநர் ஒரு­வரை தேர்ந்­தெ­டுக்கும் பொருட்டு ஜேர்­மனி மற்றும் இத்­தாலி போன்ற நாடு­களைச் சேர்ந்த பயிற்­று­நர்­க­ளுடன் இலங்கை கால்­பந்­தாட்ட சம்­மே­ளனம் கலந்து ரையாடி வருகின்றது.
metro
பயிற்­றுநர் பக்கீர் அலிக்கு கடைசி வாய்ப்பு வழங்கப்பட்டது. பயிற்­றுநர்  பக்கீர் அலிக்கு கடைசி வாய்ப்பு வழங்கப்பட்டது. Reviewed by Madawala News on January 14, 2020 Rating: 5
'; (function() { var dsq = document.createElement('script'); dsq.type = 'text/javascript'; dsq.async = true; dsq.src = '//' + disqus_shortname + '.disqus.com/embed.js'; (document.getElementsByTagName('head')[0] || document.getElementsByTagName('body')[0]).appendChild(dsq); })();
Powered by Blogger.