செலவுகளை குறைக்கும் வேலைத்திட்டம்... அரச கூட்டுத்தாபனம் மற்றும் சபைத் தலைவர்களின் மாதாந்தக் கொடுப்பனவு மட்டுப்படுத்தப்பட்டது. - Madawala News Number 1 Tamil website from Srilanka

செலவுகளை குறைக்கும் வேலைத்திட்டம்... அரச கூட்டுத்தாபனம் மற்றும் சபைத் தலைவர்களின் மாதாந்தக் கொடுப்பனவு மட்டுப்படுத்தப்பட்டது.


அரச கூட்டுத்தாபனம் மற்றும் சபைத் தலைவர்களின் மாதாந்தக் கொடுப்பனவு, ஒரு இலட்சம்
ரூபா வரை மட்டுப்படுத்தப்பட்டு, ஜனாதிபதி செயலாளரினால் சுற்று நிருபம் வௌியிடப்பட்டுள்ளது.


   இந்த சுற்று நிருபத்தின் பிரகாரம், குறித்த நிறுவனங்களின் தலைவர்களுக்கு உத்தியோகபூர்வமாக ஒரு வாகனம் மாத்திரமே வழங்கப்படவுள்ளது.
   இதனைத் தவிர, பணிப்பாளர் சபை உறுப்பினர்களுக்கான மாதாந்தக் கொடுப்பனவு 25,000 ரூபாவாக மட்டுப்படுத்தப்பட்டுள்ளது.


   அத்துடன், பணிப்பாளர் சபை உறுப்பினர்களுக்கு உத்தியோகபூர்வ வாகனங்களை வழங்க வேண்டாமெனவும், ஜனாதிபதியின் செயலாளர் ஆலோசனை வழங்கியுள்ளார்.


   அரசாங்கச் செலவுகளை மட்டுப்படுத்தும் வேலைத்திட்டத்தின் கீழ், ஜனாதிபதியின் பணிப்புரைக்கமையவே,  ஜனாதிபதியின் செயலாளரினால் குறித்த சுற்று நிருபம் வௌியிடப்பட்டுள்ளது.

( ஐ. ஏ. காதிர் கான் )
செலவுகளை குறைக்கும் வேலைத்திட்டம்... அரச கூட்டுத்தாபனம் மற்றும் சபைத் தலைவர்களின் மாதாந்தக் கொடுப்பனவு மட்டுப்படுத்தப்பட்டது. செலவுகளை குறைக்கும் வேலைத்திட்டம்... அரச கூட்டுத்தாபனம் மற்றும் சபைத் தலைவர்களின் மாதாந்தக் கொடுப்பனவு  மட்டுப்படுத்தப்பட்டது. Reviewed by Madawala News on January 16, 2020 Rating: 5