ஐக்கிய அரபு இராச்சியத்தில் கொரோனா வைரஸ் தொற்றிய ஒருவர் அடையாளம் காணப்பட்டார்.


கொரோனா வைரஸ் தாக்கத்தினால் சீனாவில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 132 ஆக
அதிகரித்து நோய்த் தொற்றுக்குள்ளானவர்களின் எண்ணிக்கையும் 6,000 ஆக  அதிகரித்துள்ளது அறிந்ததே..

ஜப்பான் மற்றும் அமெரிக்கா ஆகிய நாடுகள் நூற்றுக்கணக்கான தமது பிரஜைகளை வுஹானில் இருந்து வெளியேற்றும் பணிகளை ஆரம்பித்துள்ளது.

புதிய உயிரிழப்புகளில் ஒருவரைத் தவிர ஏனைய அனைத்து உயிரிழப்புகளும் வுஹான் மாநிலத்தில் பதிவாகியுள்ளது.

பாரம்பரியமான சீனாவின் பரபரப்பான பயணங்கள் இடம்பெறும் பருவமான சந்திர புத்தாண்டு அல்லது வசந்த விழாவின் போது வைரஸ் பரவுவதைத் தடுக்கும் முயற்சியின் ஒரு கட்டமாக, வுஹான் உட்பட கிட்டத்தட்ட 20 சீன நகரங்களில் 56 மில்லியனுக்கும் அதிகமான மக்களுக்கு பயணத்தடை விதிக்கப்பட்டுள்ளது.

இதற்கிடையில் மத்திய கிழக்கு நாடுகளுக்கு இதுவரை கொரோனா பரவியிருக்காத சூழ்நிலையில் மத்திய கிழக்கில்,  ஐக்கிய அரபு இராச்சியத்தில்   கொரோனா வைரஸ் தோற்றிய ஒருவர் அடையாளம் காணப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

https://www.arabnews.com/node/1619761/middle-east

சீனாவின் வுஹான் நகரத்தில் இருந்து வந்த ஒருவரே இவ்வாறு அடையாளம் காணப்பட்டுள்ளதாக தெரிகிறது.

இது 2002 மற்றும் 2003 ஆம் ஆண்டில் “சார்ஸ்” வைரஸ் தொற்றினால் பாதிக்கப்பட்டவர்களைவிட இது அதிகமென குறிப்பிடப்பட்டுள்ளது.
ஐக்கிய அரபு இராச்சியத்தில் கொரோனா வைரஸ் தொற்றிய ஒருவர் அடையாளம் காணப்பட்டார். ஐக்கிய அரபு இராச்சியத்தில்  கொரோனா வைரஸ் தொற்றிய ஒருவர் அடையாளம் காணப்பட்டார். Reviewed by Madawala News on January 29, 2020 Rating: 5
'; (function() { var dsq = document.createElement('script'); dsq.type = 'text/javascript'; dsq.async = true; dsq.src = '//' + disqus_shortname + '.disqus.com/embed.js'; (document.getElementsByTagName('head')[0] || document.getElementsByTagName('body')[0]).appendChild(dsq); })();
Powered by Blogger.