மாமியாரை கூரிய ஆயுதத்தால் தாக்கி கொன்று தப்பிச்சென்ற மருமகன் . - Madawala News Number 1 Tamil website from Srilanka

மாமியாரை கூரிய ஆயுதத்தால் தாக்கி கொன்று தப்பிச்சென்ற மருமகன் .


ஜாஎல பொலிஸ் பிரிவிற்குட்பட்ட துடெல்ல பகுதியில் கூரிய ஆயுதத்தால்
தாக்கி பெண் ஒருவர் கொலை செய்யப்பட்டுள்ளார்.

நேற்று (13) இரவு 9 மணியளவில் இந்த கொலை சம்பவம் இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

குடும்ப பிரச்சினை காரணமாக உயிரிழந்த் பெண்ணின் மகளின் கணவரினால் இந்த தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

கொலை சம்பவத்துடன் தொடர்புடைய மருமகன் அப்பகுதியில் இருந்த தப்பிச் சென்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

சம்பவம் தொடர்பில் ஜாஎல பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
மாமியாரை கூரிய ஆயுதத்தால் தாக்கி கொன்று தப்பிச்சென்ற மருமகன் . மாமியாரை கூரிய ஆயுதத்தால் தாக்கி  கொன்று தப்பிச்சென்ற மருமகன் . Reviewed by Madawala News on January 14, 2020 Rating: 5