கொரோனா வைரஸ் தொற்று தொடர்பில் சில அறிவுறுத்தல்கள்.


இலங்கை மற்றும் தமிழ்நாட்டு சூழலில் பொதுமக்கள் இதுபற்றி 
தற்போது பெரிய அளவு பயப்பட வேண்டிய தேவை இல்லை என்ற போதிலும் கவனமாக இருக்க வேண்டிய தேவை இருக்கின்றது.

கொரோனா வைரஸ் தொற்று ஏற்பட்டால், சாதாரண தடிமன் காய்ச்சல் போன்றோ அல்லது காய்ச்சலுடன் கூடிய உலர் இருமல் போன்றோ ஏற்படலாம். 


பின்னர் நியூமோனியா, மூச்சு திணறல் போன்ற நோய் அறிகுறிகள் ஏற்படலாம். ஆனால் கொரோனா வைரஸ் தொற்று உள்ள ஒருவரை மிக நெருக்கத்தில் சந்திருக்க வாய்ப்பே இல்லை என்பவர்கள் இந்த அறிகுறிகளுக்காக மட்டும் பதற்றம் அடைய வேண்டிய அவசியம் இல்லை.

மூக்கு, வாய் மற்றும் கண் வழியாகவே தொற்று ஏற்படும்.

 நோயாளி ஒருவரின் இருமல், தும்மல் மூலம் வெளியேறும் துளிகளில் வைரஸ் கலந்திருக்கும். அது நேரடியாக இன்னொருவரின் கண், மூக்கு, வாய் வழியாக அல்லது, இன்னொரவரின் கைகளில் ஒட்டி அங்கிருந்து கண், மூக்கு, வாய் வழியாக தொற்றை ஏற்படுத்தும்.


கொரோனா வைரஸ் தொற்று ஏற்பட்டிருக்கலாம் என்று சந்தேகிக்க கூடியவர்களுக்கு அண்மையில் போவதை தவிர்ப்பதன் மூலமும், கைகளை சுத்தமாக வைத்திருப்பதன் மூலமும் நோய் தொற்றுவதைத் தவிர்க்கலாம். 


கைகளை சுத்தமாக வைத்திருப்பதற்கு சவர்க்காரம் பயன்படுத்தி மிக நன்றாக கைகளை தேய்த்து கழுவுதல் போதுமானது. அப்படி செய்து கொள்ள முடியாத சந்தர்ப்பங்களில் சர்ஜிக்கல் ஸ்பிரிட் அல்லது hand sanitizer பயன்படுத்தி கைகளை சுத்தப்படுத்திக் கொள்ளலாம்.


தொற்று ஏற்பட்டு இரண்டு நாட்களுக்கும் இரண்டு வாரங்களுக்கும் இடைப்பட்ட காலப்பகுதியில் நோய் அறிகுறிகள் ஏற்படலாம். இந்த புதிய வைரசுக்கு எதிரான தடுப்பூசிகளோ அல்லது குறிப்பான சிகிச்சை முறைகளோ இல்லை. 


உடம்பு கொடுத்த வைரஸுக்கு எதிரான எதிர் புரதங்களை (antibody) உற்பத்தி செய்து அந்த வைரஸ்களை அழிக்கும் வரையில், மூச்சுத்திணறல் காரணமாக அல்லது சிறுநீரகம் செயலிழத்தல் காரணமாக உயிர் ஆபத்து ஏற்படாத வண்ணம் மருத்துவமனைகளில் சிகிச்சை வழங்கப்படும். 


அதேநேரம் குறித்த நோயாளி யிலிருந்து ஏனைய மனிதர்களுக்கு தொற்று ஏற்படாத வண்ணம் பாதுகாப்பதற்கான வழிமுறைகளும் பின்பற்றப்படும். 

எனவே மிக விரைவாக நோயாளிகளை மருத்துவமனைக்கு கொண்டு சேர்ப்பது அவசியம்.
– Dr. Husni Jabir

#2019NovelCoronaVirus
#2019nCoV
#2019nCoVHusUpdates
கொரோனா வைரஸ் தொற்று தொடர்பில் சில அறிவுறுத்தல்கள். கொரோனா வைரஸ் தொற்று தொடர்பில் சில அறிவுறுத்தல்கள். Reviewed by Madawala News on January 26, 2020 Rating: 5
'; (function() { var dsq = document.createElement('script'); dsq.type = 'text/javascript'; dsq.async = true; dsq.src = '//' + disqus_shortname + '.disqus.com/embed.js'; (document.getElementsByTagName('head')[0] || document.getElementsByTagName('body')[0]).appendChild(dsq); })();
Powered by Blogger.