முஸ்லிம் விவாக, விவாகரத்து சட்ட விவகாரம்: முஸ்லிம்களுக்கு பாதிப்பின்றி தீர்வு



அமு­லி­லுள்ள 1951 ஆம் ஆண்டின் 13 ஆம் இலக்க முஸ்லிம் விவாக, விவா­க­ரத்துச் சட்­டத்தை நீக்­கு­வ­தற்கு பாரா­ளு­மன்­றத்தில் தனி­நபர் சட்­ட­மூ­ல­மொன்று சமர்ப்­பிக்­கப்­பட்­டி­ருந்­தாலும் முஸ்லிம் சமூ­கத்­துக்குப் பாதிப்­பில்­லாத வகையில் தீர்வு காணப்­படும் என நீதி, மனித உரி­மைகள் மற்றும் சட்ட மறு­சீ­ர­மைப்பு அமைச்சர் நிமல் சிறி­பால டி சில்வா தெரி­வித்தார்.


முஸ்லிம் சிவில் அமைப்­பு­களின் பிர­தி­நி­திகள், உல­மாக்கள் மற்றும் புத்­தி­ஜீ­விகள் நேற்று முன்­தினம் அமைச்சர் நிமல் சிறி­பால டி சில்­வாவை பாரா­ளு­மன்ற உறுப்­பினர் பைசர் முஸ்­தபா தலை­மையில் நீதி­ய­மைச்சில் சந்­தித்து கலந்­து­ரை­யா­டினர். கலந்­து­ரை­யா­டலில் முஸ்லிம் சமூ­கத்தின் சம­கால பிரச்­சி­னைகள் கலந்­து­ரை­யாடப்பட்­டன. இந்தக் கலந்­து­ரை­யா­டலின் போது பாரா­ளு­மன்ற உறுப்­பினர் அத்­து­ர­லிய ரதன தேரர் பாரா­ளு­மன்­றத்தில் முஸ்லிம் விவாக, விவா­க­ரத்துச் சட்­டத்தை நீக்­கு­வ­தற்­காக முன்­வைத்­துள்ள தனி­நபர் பிரே­ரணை தொடர்பில் கருத்து தெரி­விக்­கை­யிலே இவ்­வாறு கூறினார்.


அவர் தொடர்ந்தும் கருத்து தெரி­விக்­கையில்,


முஸ்லிம் விவாக, விவா­க­ரத்துச் சட்­டத்தில் திருத்­தங்­களைச் சிபா­ரிசு செய்­வ­தற்­காக நிய­மிக்­கப்­பட்­டி­ருந்த குழுவின் சிபா­ரி­சுகள் முஸ்லிம் பாரா­ளு­மன்ற உறுப்­பி­னர்­க­ளாலும் முன்­னைய அமைச்­ச­ரவை யினாலும் அங்­கீ­க­ரிக்­கப்­பட்­டுள்­ளன. அந்தச் சிபா­ரி­சு­களும் பாதிப்­பற்ற வகையில் நிறை­வேற்­றப்­படும் என்றார்.


இதேவேளை திடீர் மர­ணங்­க­ளுக்­குள்­ளாகும் முஸ்­லிம்­களின் ஜனா­ஸாக்கள் வைத்­தி­ய­சாலைகளி­லி­ருந்து விடு­விக்­கப்­ப­டு­வதில் நிலவும் கால­தா­மதம் குறித்தும் அமைச்­ச­ரிடம் தூதுக்­கு­ழு­வினால் முறைப்­பாடு செய்­யப்­பட்­டது.


பிரேத பரி­சோ­தனை நடாத்­தப்­படும் ஜனா­ஸாக்கள் உட்­பட திடீர் மர­ணங்­க­ளுக்­குள்­ளா­ன­வர்­களின் ஜனா­ஸாக்கள் 24 மணித்­தி­யா­லங்­க­ளுக்குள் விடு­விக்­கப்­பட வேண்டும் என சுற்­று­நி­ருபம் இருந்­தாலும் ஜனா­ஸாக்கள் விடு­விப்­பதில் தாம­தங்­க­ளுக்கு தீர்வு வழங்­கு­மாறும் கோரிக்கை விடுக்­கப்­பட்­டது.


கொழும்பில் தற்­போது 2 திடீர் மரண விசா­ரணை அதி­கா­ரிகள் கட­மையில் இருக்கும் நிலையில் மேல­தி­க­மாக 2 திடீர் மரண விசா­ரணை அதி­கா­ரி­களை நிய­மிப்­ப­தாக அமைச்சர் உறு­தி­ய­ளித்தார்.


அத்­தோடு அழைப்­பின்­போது கட­மையில் ஈடு­ப­டு­வ­தற்கு மேல­தி­க­மாக சட்ட வைத்­திய அதி­கா­ரி­யொ­ரு­வ­ரையும் நிய­மிக்­கும்­படி கோரிக்கை விடுக்­கப்­பட்­டது.


நாடெங்கும் முஸ்­லிம்கள் பெரும்­பான்­மை­யாக வாழும் 30 பிர­தே­சங்­களில் திடீர் மரண விசா­ரணை அதி­காரி வெற்­றி­டங்கள் நில­வு­வ­தா­கவும் அப்­ப­கு­தி­க­ளுக்கு முஸ்லிம் சமூ­கத்தைச் சேர்ந்­த­வர்­களை திடீர் மரண விசா­ரணை அதி­கா­ரி­க­ளாக நிய­மிக்கும் படியும் கலந்­து­ரை­யா­டலில் கலந்து கொண்ட ஸ்ரீ லங்கா முஸ்லிம் கவுன்­ஸிலின் தலைவர் என்.எம்.அமீன் கோரிக்கை விடுத்­த­துடன் வெற்­றி­டங்கள் தொடர்­பான விப­ரங்­க­ளையும் அமைச்­ச­ரிடம் கைய­ளித்தார்.


இக்­க­லந்­து­ரை­யா­டலில் உலமாக்கள், வை.எம்.எம்.ஏ. அமைப்பின் பிரதிநிதிகள், கொழும்பு மாவட்ட மஸ்ஜித்கள் சம்மேளனத்தின் தலைவர் அஸ்லம் ஒத்மான், கொழும்பு முன்னாள் மேயர் ஒமர்காமில், ஸ்ரீ லங்கா முஸ்லிம் கவுன்ஸிலின் தலைவர் என்.எம்.அமீன், வத்தளை மாபோலை நகர சபையின் முன்னாள் தலைவர் எம்.நெளசாத், கண்டி மாவட்ட பொதுஜன பெரமுன அமைப்பாளர் ஏ.எல்.எம்.பாரிஸ் ஆகியோர் உட்பட பலர் கலந்து கொண்டிருந்தனர்.


Vidivelli

ஏ.ஆர்.ஏ.பரீல்

முஸ்லிம் விவாக, விவாகரத்து சட்ட விவகாரம்: முஸ்லிம்களுக்கு பாதிப்பின்றி தீர்வு முஸ்லிம் விவாக, விவாகரத்து சட்ட விவகாரம்: முஸ்லிம்களுக்கு பாதிப்பின்றி தீர்வு Reviewed by Madawala News on January 14, 2020 Rating: 5
'; (function() { var dsq = document.createElement('script'); dsq.type = 'text/javascript'; dsq.async = true; dsq.src = '//' + disqus_shortname + '.disqus.com/embed.js'; (document.getElementsByTagName('head')[0] || document.getElementsByTagName('body')[0]).appendChild(dsq); })();
Powered by Blogger.