ரஞ்சனின் தொலைபேசி உரையாடல்கள் சமூக ஊடகங்களில் பகிரங்கப்படுத்த பட்டுள்ளதால் நாட்டின் கலாச்சாரத்திற்கு சீரழிவு ஏற்பட்டுள்ளது.


நாட்டின் தற்போது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ள தொலைபேசி உரையாடல் பதிவு மற்றும் தனிப்பட்ட
உரையாடல்களின் குரல் பதிவுகளை ஊடகங்களில் பகிரங்கப்படுத்தியமை, ­­நாட்டின் கலாசாரத்துக்கு பெரும் பாதிப்பானதென்றும் நவீன தொழில்நுட்பத்தை தவறாக உபயோகிக்கப்படுத்தியதால் இந்நிலைமை ஏற்பட்டுள்ளதாகவும் சபாநாயகர் கரு ஜயசூரிய தெரிவித்தார். நவீன தொழில்நுட்பம் நாட்டின் வளர்ச்சிக்கு பெரும் உதவியாகவுள்ளது. எனினும் தொழில் நுட்பத்துக்கு அடிமையானதால் சமூகம் அழிவினை நோக்கி செல்லும் ஆபத்து ஏற்பட்டுள்ளதாகவும் சபாநாயகர் தெரிவித்தார். 

கண்டி தலைமை சங்க நாயக்கராக தெரிவு செய்யப்பட்ட  மில்லேவ சுமனதிஸ்ஸ தேரருக்கு நியமனப்பத்திரத்தை வழங்கும் நிகழ்வு பதவி ஸ்ரீபுர, அலிவஸ்குவ போதிருக்காராம ரஜமஹா விஹாரையில் நடைபெற்றது. இதில் பிரதம அதிதியாக கலந்து கொண்டபோதே சபாநாயகர் கரு ஜயசூரிய  இதனை தெரிவித்தார். 

தொலைபேசி உரையாடல்கள் உள்ளிட்ட தனிப்பட்ட தகவல்களை சமூக  வலைத்தளங்களில் வெளியிட முடியும்.எனினும் ஒரு வகையில் இவை கலாசார சீரழிவுகளையே ஏற்படுத்துகிறது.

எவ்வாறாயினும் சட்டவிரோதமான தகவல்கள் ஏதேனும் வெளிவந்திருந்தால் அது குறித்து நடிவடிக்கை எடுக்க வேண்டும் . அதனை தவிர்க்க முடியாதெனவும் அவர் தெரிவித்தார். 
ரஞ்சனின் தொலைபேசி உரையாடல்கள் சமூக ஊடகங்களில் பகிரங்கப்படுத்த பட்டுள்ளதால் நாட்டின் கலாச்சாரத்திற்கு சீரழிவு ஏற்பட்டுள்ளது. ரஞ்சனின்  தொலைபேசி உரையாடல்கள் சமூக  ஊடகங்களில் பகிரங்கப்படுத்த பட்டுள்ளதால் நாட்டின் கலாச்சாரத்திற்கு சீரழிவு ஏற்பட்டுள்ளது. Reviewed by Madawala News on January 14, 2020 Rating: 5
'; (function() { var dsq = document.createElement('script'); dsq.type = 'text/javascript'; dsq.async = true; dsq.src = '//' + disqus_shortname + '.disqus.com/embed.js'; (document.getElementsByTagName('head')[0] || document.getElementsByTagName('body')[0]).appendChild(dsq); })();
Powered by Blogger.