குற்றத் தடுப்பு அதிகாரிகள் போல் நடித்து, மசாஜ் நிலையமொன்றில் பெண்களை கடத்தி சென்றவர்கள் கைது.


வலான குற்றத்தடுப்புப் பிரிவின் அதிகாரிகள் என தெரிவித்து பெண்கள் இருவரை கடத்திச்சென்ற
சம்பவம் தொடர்பில் மூவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

ஹபரணை – மீகஸ்வெவ பகுதியில் இயங்கும் மசாஜ் நிலையமொன்றில்  வைத்து இந்த கடத்தல் சம்பவம் இடம்பெற்றுள்ளது.

சந்தேக நபர்கள் பயன்படுத்திய பொலிஸ் இலட்சனை, நீலநிற தொப்பி, பொலிஸார் என குறிப்பிடப்பட்ட அடையாள அட்டை மற்றும் ஜீப் வண்டியொன்றையும் பொலிஸார் கைப்பற்றியுள்ளனர்.

30, 39 மற்றும் 55 வயதுடைய குருநாகல், திருகோணமலை மற்றும் புத்தளத்தைச் சேர்ந்தவர்களே கைது செய்யப்பட்டுள்ளனர்.

இவ்வாறான மோசடி நடவடிக்கைகளில் ஈடுபடுபவர்கள் தொடர்பில் தகவல் கிடைத்தால் வலான குற்றத்தடுப்புப் பிரிவின் 038 – 2234314 என்ற இலக்கத்துக்கு அழைக்குமாறு பொலிஸார் பொதுமக்களை கேட்டுக்கொண்டுள்ளனர்.
குற்றத் தடுப்பு அதிகாரிகள் போல் நடித்து, மசாஜ் நிலையமொன்றில் பெண்களை கடத்தி சென்றவர்கள் கைது.  குற்றத் தடுப்பு அதிகாரிகள் போல் நடித்து, மசாஜ் நிலையமொன்றில் பெண்களை கடத்தி சென்றவர்கள் கைது. Reviewed by Madawala News on January 14, 2020 Rating: 5
'; (function() { var dsq = document.createElement('script'); dsq.type = 'text/javascript'; dsq.async = true; dsq.src = '//' + disqus_shortname + '.disqus.com/embed.js'; (document.getElementsByTagName('head')[0] || document.getElementsByTagName('body')[0]).appendChild(dsq); })();
Powered by Blogger.