73 கோடி ரூபாவுக்கும் அதிகமான பணத்தை மோசடி செய்த வங்கி முகாமையாளர் &பொது முகாமையாளர் கைது. - Madawala News Number 1 Tamil website from Srilanka

73 கோடி ரூபாவுக்கும் அதிகமான பணத்தை மோசடி செய்த வங்கி முகாமையாளர் &பொது முகாமையாளர் கைது.


நிதி மோசடி செய்த குற்றத்திற்காக கம்பஹா சணச கிராமிய வங்கியின் முகாமையாளர் மற்றும் பிரதி
பொது முகாமையாளர் ஆகியோர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

சுமார் 73 கோடி ரூபாவுக்கும் அதிகமான பணத்தை மோசடி செய்துள்ளமை தெரியவந்துள்ளது.

வைப்பாளர்களினால் வைப்பில் இடப்பட்ட நிதியே இவ்வாறு மோசடி செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.

இது தொடர்பான விசாரணைகளை அடுத்தே சணச கிராமிய வங்கியின் முகாமையாளர் மற்றும் பிரதி பொது முகாமையாளர் ஆகியோர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

குறித்த சந்தேகநபர்கள் கம்பஹா நீதவான் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்படவுள்ளனர்.

குறித்த சம்பவம் தொடர்பாக மேலதிக விசாரணைகளை கம்பஹா பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
73 கோடி ரூபாவுக்கும் அதிகமான பணத்தை மோசடி செய்த வங்கி முகாமையாளர் &பொது முகாமையாளர் கைது. 73 கோடி ரூபாவுக்கும் அதிகமான பணத்தை மோசடி செய்த வங்கி  முகாமையாளர் &பொது முகாமையாளர் கைது. Reviewed by Madawala News on January 14, 2020 Rating: 5