65 பேரில் 52 பேர் சஜித்துக்கு ஆதரவு !கட்சித்தலைவரை தீர்மானிக்கும் ஐக்கிய தேசிய கட்சியின் கூட்டம் தீர்மானம் இன்றி நிறைவடைந்துள்ளது.


கட்சி தலைவர் பதவியை சஜித்துக்கு வழங்குமாறு ஐக்கிய தேசிய கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர்கள் பலர் போர்க்கொடி தூக்கியுள்ள நிலையில் உறுப்பினர்களின் எதிர்ப்பால் ரனில் விக்ரமசிங்க கூட்டத்தை விட்டு வெளியேறி சென்றதாக  ஐக்கிய தேசிய பாராளுமன்ற உறுப்பினர் ஒருவர் மடவளை நியுசுக்கு குறிப்பிட்டார்.

இன்றறைய கூட்டத்தில் 65 பேரில் 52 பேர் சஜித்துக்கு ஆதரவு வெளியிட்டுள்ள அதேவேளை வாக்கெடுப்பு ஒன்றிற்கு செல்ல ரனில் தரப்பு மறுத்துள்ளது.

ரனில் விக்ரமசிங்க கூட்டத்தில் இருந்து வெளியேறியுள்ள நிலையில் அவருக்கு ஆதரவாக சிலரும் வெளிநடப்பு செய்துள்ளனர்.

எதிர்வரும் திங்கள் அல்லது செவ்வாய் கட்சி நிறைவேற்று குழு கூடி தலைவரை தீர்மானிக்க முடிவு செய்யப்பட்டதாக கூறப்பட்டது.

65 பேரில் 52 பேர் சஜித்துக்கு ஆதரவு ! 65 பேரில் 52 பேர் சஜித்துக்கு ஆதரவு ! Reviewed by Madawala News on January 16, 2020 Rating: 5