கைது செய்யப்பட்ட 61 பேரின் விளக்கமறியல் 28ஆம் திகதி வரை நீடிக்கப்பட்டது. - Madawala News Number 1 Tamil website from Srilanka

கைது செய்யப்பட்ட 61 பேரின் விளக்கமறியல் 28ஆம் திகதி வரை நீடிக்கப்பட்டது.


உயிர்த்த ஞாயிறுத் தாக்குதலின் பின்னர், தேசிய தௌபீக் ஜமாத் இயக்கதுடன் தொடர்புபட்டதாகக் கைது
செய்யப்பட்ட 61 பேரின் விளக்கமறியல், இம்மாதம் 28ஆம் திகதி வரையில் நீடிக்கப்பட்டுள்ளது.

மட்டக்களப்பு நீதவான் நீதிமன்ற நீதிபதி ஏ.சி. ரிஸ்வான் முன்னிலையில் இன்று (14) காலை இவர்கள் ஆஜர்படுத்தப்பட்டபோதே, விளக்கமறியல் உத்தரவைப் பிறப்பித்தார்.

நுவரேலியாவிலுள்ள தேசிய தௌபீக் ஜமாத் தலைமைகத்தில் ஆயுதப் பயிற்சி பெற்றதாகச் சந்தேகத்தின் பேரில் கைதுசெய்யப்பட்ட காத்தான்குடியை சேர்ந்தவர்களே, இவ்வாறு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.

உயிர்த்த ஞாயிறுத் தாக்குதலின் பின்னர் மேற்கொள்ளப்பட்டுவரும் விசாரணைகளின் அடிப்படையில் இவர்கள் சந்தேகத்தின் பேரில் கைதுசெய்யப்பட்டு, விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.

கைது செய்யப்பட்ட விளக்கமறியிலில் வைக்கப்பட்டிருந்த 64 பேரில் ஏற்கெனவே மூவருக்கு பிணை வழங்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
கைது செய்யப்பட்ட 61 பேரின் விளக்கமறியல் 28ஆம் திகதி வரை நீடிக்கப்பட்டது. கைது செய்யப்பட்ட 61 பேரின் விளக்கமறியல் 28ஆம் திகதி வரை நீடிக்கப்பட்டது. Reviewed by Madawala News on January 14, 2020 Rating: 5