பல்கலைக்கழக மாணவர்களுக்கான 5 நாட்கள் கொண்ட மோஜோ பயிற்சி நெறி - Madawala News Number 1 Tamil website from Srilanka

பல்கலைக்கழக மாணவர்களுக்கான 5 நாட்கள் கொண்ட மோஜோ பயிற்சி நெறி

இலங்கையில் ஊடகத்துறையில் கல்வி பயிலும் பல்கலைக்கழக மாணவர்களுக்கான 5 நாட்கள் கொண்ட மோஜோ பயிற்சி நெறியானது கடந்த ஜனவரி மாதம் இரண்டாம் திகதி தொடக்கம் ஏழாம் திகதி வரை நீர்கொழும்பில் இடம்பெற்றது.


இந்தப் பயிற்சி நெறியில் யாழ்ப்பாணம் திருகோணமலை பல்கலைக்கழக வளாகம் மற்றும் ஸ்ரீ ஜெயவர்த்தனபுர பல்கலைக்கழகங்களில் இருந்து மூன்றாம் வருடத்தில் ஊடக கற்கை நெறியை பயிலுகின்ற சுமார் 25 மாணவர்கள் பங்குபற்றினார் (10-சிங்களம், 14-தமிழ், 1-முஸ்லீம்). இந்த பயிற்சி நெறியானது இலங்கையில் சமாதானம் மற்றும் நல்லிணக்கத்தினை இளைஞர்கள் மத்தியில் ஏற்படுகின்ற நோக்கத்தில் இலங்கை அபிவிருத்திக்கான ஊடகவியலாளர் மன்றத்தினால் வடிவமைக்கப்பட்ட மீடியாகோர்ப்ஸ் (Media Corps) புலமைப்பரிசில் திட்டத்தின் ஒரு பகுதியாக நடைமுறைப்படுத்தப்பட்டது.
இந்த பயிற்சியில் பங்கு பற்றிய பல்கலைக்கழக மாணவர்களுக்கு மோஜோ கிட்ஸ் (MoJo kits) வழங்கப்பட்டதுடன் முரண்பாட்டு உணர்திறன் ஊடகவியல், பாலியல் உணர்திறன் ஊடகவியல், ஃபேக் நியூஸ் (Fake News), கேமரா அடிப்படை வகைகள், விஷுவல் ஸ்டோரி டெல்லிங் (Visual storytelling) நுட்பங்கள், இலவச மொபைல் ஆப் மற்றும் வீடியோ எடிட்டிங் (Video editing) போன்ற பல்வேறு தலைப்புகளில் பயிற்சிகள் வழங்கப்பட்டன.


பயிற்சியின் ஒரு பகுதியாக மாணவர்கள் அனைவரும் அண்மையில் உள்ள கிராமத்திற்கு அழைத்துச் செல்லப்பட்டு கையடக்கத் தொலைபேசியை பயன்படுத்தி ஒரு வீடியோ கதை உருவாக்குவதற்கான பிரித்தியோக பயிற்சிகள் வழங்கப்பட்டதுடன் ஒவ்வொரு மாணவரும் இறுதியில் ஒரு கதையை உருவாக்கினார்.


இதில் பிரதம அதிதியாக கலந்துகொண்ட Ms. Jean Mackenzie தனது உரையில் ஊடகவியல் என்பது மிகவும் உட்சாகமான மற்றும் முக்கியமான தொழில்களில் ஒன்றாகும், இது உங்களை பல தளங்களுக்கு அழைத்துச் செல்லும், நீங்கள் எண்ணிடாத உலகத்தினை பார்க்க அது உங்களுக்கு வழிவகுக்கும், சிறந்த ஊடக செயற்பாடானது இக்கட்டான அல்லது கடினமான காலகட்டத்திற்கு உள்ளான ஒரு நாட்டில் நீங்கள் செய்யக்கூடிய மிக முக்கியமான விடயங்களில் ஒன்றாகும், ஊடகவியலினை பயன்படுத்தி மக்களை ஒன்றிணையுங்கள் மாறாக அவர்களை சிதைக்காமல் எனும் முக்கிய கருத்தினை பதிவு செய்தார்.இச் செயற்றிட்டமானது அனுபவம் வாய்ந்த வளவாளர்களான Dr விஜய ஜயதிலக்க, பணிப்பாளர், சட்ட கற்கை நெறிகளுக்கான தெற்காசிய நிலையம், Mr. T.M.G. சந்திரசேகர, specialist, Strategic Communications, ICTA, Mr. ஷான் விஜேதுங்க, Director Communications, இலங்கை பாராளுமன்றம், Mr. K.C. சாரங்க, செய்தி பொது மேலாளர், TV தெரன, Mr. மொஹமட் பய்றூஸ், ஆசிரியர், விடிவெள்ளி, Mr. கபில ராமநாயகே மற்றும் MoJo பயிற்சியாளரான மொஹமது அஸ்வர், SDJF ஆகியோரினால் நடாத்தப்பட்டது.


இப் பயிற்சியினைத் தொடர்ந்து பல்கலைக்கழக மாணவர்கள் வேறுபட்ட கலாசார பின்னணியினை கொண்ட ஏனைய மாணவர்களுடன் சோடிகளாக 7 நாட்கள் கொண்ட கள விஜயத்தினை மேற்கொண்டு குறித்த சமூகத்தின் கலாச்சாரம், நம்பிக்கை மற்றும் செயற்பாடுகளை புரிந்துகொண்டு அவர்கள் எதிர்கொள்ளும் சமூகப் பிரச்சனைகளை பல் ஊடக (Multi Media) கதைகளாக உருவாக்கி அவற்றை சமூக ஊடகங்களினுடாக வெளியிடுவார்கள்.
இவ் MediaCorps புலமைப்பரிசில் திட்டமானது ஓர் ஜனநாயக இலங்கைக்கான ஊடக வலுப்படுத்தல் (MEND) எனும் செயற்றிட்டத்தின் கீழ் USAID மற்றும் International Research and Exchanges Board (IREX) நிறுவனங்களுடன் ஒண்றிணைந்து இலங்கை அபிவிருத்திக்கான ஊடகவியலாளர் மன்றத்தினால் நடாத்தப்பட்டது என்பதும் குறிப்பிடத்தக்கது.


 மேலதிக தகவல்களுக்கு எமது இணையத்தளத்தினை பிரவேசியுங்கள் www.Ldjf.org
பல்கலைக்கழக மாணவர்களுக்கான 5 நாட்கள் கொண்ட மோஜோ பயிற்சி நெறி பல்கலைக்கழக மாணவர்களுக்கான 5 நாட்கள் கொண்ட மோஜோ பயிற்சி நெறி Reviewed by Madawala News on January 16, 2020 Rating: 5