டுவிட்டரில் வைரல் ஆன கோபி ப்ரையன்ட் மரணம் குறித்த 2012 ஆம் ஆண்டு பதிவு.


ஒலுவில் எம்.ஜே.எம் பாரிஸ்
ஹெலிகாப்டர் விபத்தின் இறந்த கோபி ப்ரையன்ட் ( Kobe Bryant ) மரணம் பற்றி 8 ஆண்டுகளுக்கு
ஒருவர் பதிவிட்ட   டுவிட்டர் பதிவொன்று இணையத்தில் வைரலாகி வருகிறது.


அமெரிக்காவின் தேசிய கூடைப்பந்து கூட்டமைப்பின் முக்கிய வீரர் கோபி ப்ரையண்ட். கூடைப்பந்து விளையாட்டில் 20 வருடமாக மாபெரும் ஆளுமையாக திகழ்ந்தவர். ஒலிம்பிக் போட்டிகளில் 2 முறை தங்கப்பதக்கம் வென்றவர்.


நேற்று அதிகாலை கோபி ப்ரையன்ட் தனது 13 வயது மகள் ஜியானா உட்பட 8 பேருடன் தனியார் ஹெலிகொப்டரொன்றில் தவுசண்ட் ஆக்ஸ் என்னும் பகுதியை நோக்கிச் சென்று கொண்டிருந்தார்.


கடும் பனி மூட்டத்தின் நடுவே கலாபஸாஸ் என்னும் இடத்திலுள்ள மலைப்பகுதியின் சென்று கொண்டிருக்கும்போது ஹெலிகொப்டர் திடீரென தீப்பிடித்துக் கொண்டது.

இதில் கோபி ப்ரையண்ட், அவரது 13 வயது மகள் ஜியானா உள்ளிட்ட 9 பேர் உடல் கருகி உயிரிழந்தனர்.


கோபி ப்ரையன்ட்டின் மரணம் உலக கூடைப்பந்து ரசிகர்களை சோகத்தில் ஆழ்த்தியது. இவரது மரணத்துக்கு அமெரிக்கா முன்னாள் ஜனாதிபதி ஒபாமா, அமெரிக்கா ஜனாதிபதி டொனால்டு ட்ரம்ப் உள்ளிட்ட பலரும் இரங்கல் தெரிவித்தனர்.

இந்நிலையில் கோபி கோபி ப்ரையன்டின் மரணம் குறித்து 8 வருடத்துக்கு முன்பே ஒரு நபர் பதிவிட்ட டுவிட்டர் பதிவொன்று நேற்று முதல் வைரலாகி வருகிறது.

டுவிட்டரில் நோஸோ என்ற பெயர் கொண்ட அந்த நபர் 2012ம் ஆண்டு November 14ம் திகதி ஒரு பதிவிட்டுள்ளார். அதில் “ஒரு ஹெலிகொப்டர் விபத்தில் கோபி இறக்கப்போகிறார்” என்று குறிப்பிட்டுள்ளார்.

நேற்று அந்த பதிவின் பின்னூட்டத்தில் அந்த நபர் மன்னிப்பும் கோரியுள்ளார். இந்த பதிவு நேற்று முதல் வைரலாகி வருகிறது. இணையவாசிகள் பலரும் அந்த பதிவின் பின்னூட்டத்தில் சென்று தங்களுடைய எதிர்காலம் பற்றி கூறுமாறு அந்த நபரிடம் கேட்டு வருகின்றனர்.
டுவிட்டரில் வைரல் ஆன கோபி ப்ரையன்ட் மரணம் குறித்த 2012 ஆம் ஆண்டு பதிவு. டுவிட்டரில் வைரல் ஆன  கோபி ப்ரையன்ட் மரணம் குறித்த 2012 ஆம் ஆண்டு  பதிவு. Reviewed by Madawala News on January 28, 2020 Rating: 5
'; (function() { var dsq = document.createElement('script'); dsq.type = 'text/javascript'; dsq.async = true; dsq.src = '//' + disqus_shortname + '.disqus.com/embed.js'; (document.getElementsByTagName('head')[0] || document.getElementsByTagName('body')[0]).appendChild(dsq); })();
Powered by Blogger.