பிரியங்கா ரெட்டியை முன் வைத்து நடந்து முடிந்த என்கவுன்டர்




டிசம்பர்-06ம் திகதி

இநதிய அரசியலமைப்பின் தந்தை அம்பேத்கரின் நினைவு நாள்….

அந்த அற்புதமான மா மனிதரின் நினைவு நாளை ஃபோர்மலின் போடாத பிணக்கணக்காய் நாறடிக்க வேண்டுமென்பதற்காக அந்த நாளை அப்படியே மறக்கடிக்கச் செய்வதற்காக திட்டமிட்டே இதே நாளைத் தெரிவு செய்து அயோத்தியிலிருக்கின்ற முஸ்லீம்களின் பாபர் மசூதியை சங்கிகள் சேர்ந்து இடித்த கறுப்பு நாள்……

அற்புதமான மனிதர் அம்பேத்கரின் புன்னகைத்த முகத்தில் அவர் கனவு கண்ட இந்தியாவை கற்பனை செய்தவாறு, ஆர்எஸ்எஸ் கருமாந்திரங்கள் இடித்த அயோத்தி பாபர் மசூதியின் துயரத்தில் தோய்ந்தவாறு இருக்கையிலேயே வந்து சேர்ந்தது ஹைதரபாத்தில் கூட்டுப் பாலியல் வல்லுறவு (Gang Rape) செய்யப்பட்டு எரித்துப் படுகொலை செய்யப்பட்ட மிருக வைத்தியர் பிரியங்கா ரெட்டியின் வழக்கில் சந்தேக நபர்களாக கைது செய்யப்பட்ட நான்க சின்னப் பசங்களும் இன்று விடிகாலை 3.30 போல தெலுங்கானா பொலிசாரால் என்கவுன்டர் செய்யப்பட்டு எக்ஸ்ட்ரா ஜுடிஷீயல் (Extra Judicial Killings) கொலை செய்யப்பட்ட இரத்த சேதி. 

“பிரியங்கா ரெட்டி கொலை செய்யப்பட்ட இடத்துக்கு அழைத்துச் சென்ற போது அந்த இடத்திலிருந்து சந்தேக நபர்கள் பொலிசாரிடமிருந்து துப்பாக்கிகளை பறித்த அவர்களை தாக்கி துப்பாகியால் சுட்டு தப்பிக்க முயற்சித்தார்கள்” என்பதே என்கவுன்டருக்கான உடனடிக் காரணமாகவும் சொல்லப்பட்டிருக்கின்றது. 

கடந்த நவம்பர் இருபத்தியேழாம் திகதி மாலை 6.30க்குப் பின்னர் தனது மோபெட்டில் வீடு திரும்புகின்ற வழியில் பிரியங்கா ரெட்டி சந்தேக நபர்களால் கூட்டு பாலியல் வன்பணர்வுக்குட்படுத்தப்பட்டு எரித்துக் கொல்லப்பட்ட கொடூரம் இந்திய தேசத்தை மட்டுமல்ல முழு உலகையுமே உசுப்பி விட்டிருந்தது. சமப்வத்தின் பின்னர் இந்திய தேசமே பெண்களுக்கெதிரான பாலியல் கொடுமைகள் தொடர்பில் பொங்கியெழுந்திருந்தது. நாடாளுமன்றம் வரை பிரியங்காவுக்கு நேர்ந்த கொடூரம் சம்மட்டிகளனால் நீதி தேவதையின் நடு மண்டையில் அறைந்த கொண்டிருந்தது. 

இந்த நிலையில்தான் பிரியங்காவின் கொடூரத்துக்கு காரணமானவர்களென்று கைது செய்யப்பட்ட நான்கு சந்தேக நபர்களும் பொலிசாரின் என்கவுன்டரில் பரலோகத்துக்கு பார்சல் பண்ணப்பட்டிருக்கின்றனர். தேசமே இந்த என்கவுன்டரை கொண்டாடிக்கொண்டிருக்கின்ற வேளை அந்த என்கவுன்டர்களை எக்ஸிகியுட் பண்ணிய இன்ஸ்பெக்டருக்கு பாராட்டு பொக்கேக்கள் தெறித்துக் கொண்டிருக்கின்றன.

கொடூரமான குற்றம் செய்தவர்கள் குரூரமாக தண்டிக்கப்பட வேண்டுமென்பதில் இரண்டாம் கருத்துக்கு இடமேயில்லை. சந்தேக நபர்களின் இந்த என்கவுன்டர் மரணங்கள் மகளை அகாலமாக இழந்து கொஞ்சம் கொஞ்சமாய் செத்துக் கொண்டிருக்கின்ற பிரியங்காவின் பெற்றோர்களுக்கு நிச்சயமாக மன ரீதியில் பெரும் ஆறுதலாக இருக்கும் என்பதில் சந்தேகமே கிடையாது. 

பொதுப்புத்தி தேசத்தார்களும் பொது சனங்களும் குற்றம் செய்தவர்கள் உடனடியாக தண்டிக்கப்பட்டார்ர்கள் என்று புரித்துப்போய்க் கிடக்கின்றனர். சட்டத்தின் மீதும் நீதிமன்றங்கள் மீதம் மக்கள் வைத்திருக்கின்ற பலவீனமான நம்பிக்கையையே இது காட்டுகின்றது. 

ஆனாலும் இந்த என்கவுன்டர் கொலைகளைப் பார்க்கின்ற போது எங்கேயோ எனக்கு உதைக்கின்றது. பொலிசாரை சுட்டு விட்டு தப்பிக்க முயற்சித்தார்கள்…அதன் காரணமாகவே சந்தேக நபர்களை சுட்டோம் என்று பொலிஸ் தரப்பு சொல்லுகின்ற சப்பைக்கட்டு காரணம் சுத்தமாக நம்பும் படியாக இல்லை. இந்த என்கவுன்டர் ஒன்றும் திடீர் எக்ஸிகியுஷன் கிடையாது என்பது ஓரளவு யோசிக்கின்றவர்களுக்கு சடாரென்று புரியும். 

நீதிமன்றத்தில் மாஜிஸ்ட்ரேட்டின் கட்டளையின் பேரில் தமது கட்டுப்பாட்டின் கீழ் பொலிசார் சந்தேக நபர்களை எடுக்கின்ற போது மாஜிஸ்ட்ரேட்டின் கட்டளைப்படியே அவர்களை நடாத்த வேண்டும். பிரயிங்கா வழக்கிலும் மஜீஸ்ட்ரேட் கட்டளையின் பேரிலேயே சந்தேக நபர்கள் பொலிஸ் கஸ்டடியில் இருந்திருக்கின்றனர். பொதுவாக குற்றம் நடந்த இடத்துக்கு சந்தேக நபர்களை நடுச் சாமத்தில் அழைத்துச் செல்ல மாட்டார்கள். அதற்கு மாஜிஸ்ட்ரேட்டின் விஷேட அனுமதி வேண்டும். பிரியங்கா வழக்கில் அப்படி விஷேட அனுமதயிருந்ததாக சான்றுகள் கிடையாது. 

பகலிலேயே தேவையேற்படின் சந்தேக நபர்களை சம்பவ இடத்துக்கு கொண்டு செல்லுவார்கள். பிரியங்கா வழக்கில் பொலிசார் நடுச்சாமத்தில் (விடிகால 3.30) சந்தேக நபர்களை குற்றம் நடத் இடத்துக்கு கொண்டு சென்றதே பாரிய சந்தேகத்தை கிளப்புகின்றது. பொலிசாரின் என்கவுன்டர் ஏற்கெனவே திட்டமிடப்பட்டிருக்க வேண்டும். அவ்வாறெனில் இதன் பின்னே ஏதோ இருக்கின்றது என்பதுதான் அர்த்தம். 

இது வரைக்கும் இந்திய தேசத்தில் எத்தனையோ சோலோ பாலியல் கூட:டப்பாலியல் குற்றங்கள் நடந்திருக்கின்றன. இது வரை இப்படி என்கவுன்டர் நடந்தது கிடையாது. ஆனால் இப்போது பிரியங்கா வழக்கில் நடந்திருக்கின்றது என்றால் ஏதோ ஒன்று இதன் பின்னால் இருப்பதாகவே மனசு சொல்லுகின்றது. அவ்வாறெனில் சந்தேக நபர்களை கொல்லுவதன் மூலம் யாருக்கு எனன் லாபம்……..பல உண்மைகள் வெளிவருவதனை இதன் மூலம் தடுத்திருக்கலாம். இந்த சந்தேக நபர்கள் தவிர இவர்களின் பின்னே வேறு பல மெகா சைஸ் கைகளும் இருக்கலாமென்கின்ற சந்தேகம் வலுப்பெறுகின்றது. 

அதே நேரம் வட இந்தியாவில் எத்தனையோ தலித் பெண்கள் மேல்சாதி கீழ்சாதிகளால் கூட்டப்பாலியல் செய்யப்பட்டு கொலை செய்யப்படுகின்ற கொடூரங்கள் நாளாந்’தம் நடந்து கொண்டேயிருக்கின்றன. அவர்களில் யாரும் இது வரை  என்கவுன்டர் என்ன ஆகக்குறைந்தது அவர்கள் பெரிதாய் விளக்க மறியலில் கூட இருப்பதில்லை. லேசாக வெளியே வந்து விடுகின்றனர். பலருக்க வழக்ககளே போடப்படுவதில்லை. அண்மையில் தமிழகத்தின் பொள்ளாச்சி சம்பவம். மிகக் கொடூரமாக பல பெண்கள் கூட்டுப்பாலியல் வல்லுறவாக்குட்படுத்தப்பட்ட குற்றங்களில் கைது செய்யப்பட்ட ஓநாய்கள் மிக லேசாக இதோ வெளியே வந்து விட்டனர். 

இத்தனைக்கும் இவர்களுக்கெதிராக அத்தனை  சான்றுகளும் பக்காவாக இருக்கின்றன. ஆனால் இவர்கள் அரசியல் செல்வாக்கு மிக்க கழிசடைகள். இப்படி இந்திய தேசத்தில் தாழ்த்தப்பட்ட சாதியில் குறைந்த மற்றும் வறுமைக்குப் பிற்நத வேற்று மதத்துப் பெண்கள் தொடர்ந்தேச்சையாக பாலியல் வல்லுறவுக்குட்பட்டு வருகின்றனர். அவர்களது வழக்குகளில் கைது செய்யப்படுகின்ற மேல் சாதி கம்ணாட்டிகள் பணக்கார களவானிகள் அரசியல் செல்வாக்குள்ள பாஸ்டர்டுகள் யாரும் இது வரை என்கவுன்டர் செய்யப்பட்ட வரலாறுகள் ஏதும் கிடையாது. பிரியங்காவின் வழக்கிலும் என்கவுன்டர் செய்யப்பட்டர்கள் சங்கி மங்கிகளாக, ஆர்எஸ்எஸ் அருணாக் கயிறுகளாக அரசியல் செல்வாக்குள்ள எருமைகளாக பணக்கார முதலைகளாக இருந்திருந்தால் இந்த என்கவுன்டர் ந்டநதேயிருக்காது.

எனவேதான் நடந்து முடிந்திருக்கின்ற இந்த என்கவுன்டர் எனக்குள்ளே ஏகப்பட்ட கேள்விகளை இப்போது வரைக்கும் புதிசு புதிசாய் எழுப்பிக் கொண்டேயிருக்கின்றது. தவிரவும் என்கவுன்டர் என்ற ஒன்றை காவல் துறை பாலியல் வல்லுறவு பொன்ற வழக்குகளில் கையிலே எடுத்தால் இனி வருங்காலங்களில் சட்டத்துக்கும் நீதிமனற்த்துக்கும் நாட்டில் தேவையே இருக்காது என்கின்ற பேராபத்தினை உருவாக்குவதோடு தனிப்பட்ட குரோதங்களுக்கும் என்கவுடன்டர் ஓர் கூரிய ஆயதமாக பயன்படுத்தப்படுகின்ற விஷச் சூழலையும் உருவாக்கி விடும். 

பிரியங்கா வழக்கில் கைது செய்யப்பட்டவர்களுக்கு அவர்கள்தான் உண்மையான குற்றவாளிகள் என்று நிரூபணமாகின்ற போது அவரல்களுக்கு மரண தண்டனை வழங்க வேண்டுமென்பதில் இரண்டாம் கருத்தே கிடையாது. அதற்க ஒரு மறை இருக்கின்றது. ஆனால் அந்தத் தண்டனையை வழங்குகின்ற உரிமையை காவல் துறையே தனது முரட்டுக் கைகளில் எடுக்குமானால் ஏற்படுகின்ற பின் விபரீதங்களுக்கு எதிர்காலத்தில் சமூகம் முகம் கொடுக்க முடியாமலே போய் விடும். இன்று பல குற்றவாளிகள் தாம் செய்த குற்றங்களிலிருந்து தப்பித்துக் கொள்ள காரணமாக அமைவதே காவல் தறைதான். சரியான முறையில் விசாரணைகள் செய்யாததன் காரணமாக சரியான முறையில் குற்றவாளிகளுக்கதெிரான சான்றுகளையும் சாட்சிகளையும் தயாரிக்கத் தவறுவதன் காரணமாக (வேண்டுமென்றோ அல்லது திட்டமிடாமலோ) பல குற்றவாளிகள் லேசாக தப்பித்திருக்கின்றனர். 

இங்கே குற்றவாளிகளை தண்டிப்பதற்காக போதுமான எல்லா சட்டக்ளும் நாட்டி;ல தாராளமாக போதியளவு இருக்கின்றன. காவல் துறையும் நீதித்துறையும் மிகச் சரியாக முடுக்கி விடப்பட்டால் குற்றங்கள் செய்கின்றவர்கள் லேசாக தப்பித்துக்கொள்ளவே முடியாது. அதே நேரம் இங்கேயிருக்கிகன்ற பிரச்சினை காவல் துறையும் சட்டமும்தான். சில நேரம் நீதிமன்றங்கள் கூட.(உதாரணமாக அண்மைய அயோத்திய பாபரி மசூதி இடிப்பு தொடர்பான இந்திய உச்ச நீதிமன்றத் தீர்ப்பு) 

இந்திய போன்ற நாடுகளில் சாதி மதம் குலம் கோத்திரம் உள்ளமை இல்லாமை அரசியல் செல்வாக்கு செல்வச் செல்வாக்கு என்பவற்றினடிப்படையிலேயே ஆளாளுக்கேற்ப மேற் சொன்ன நிறுவனங்கள் தம்மை இயக்கிக் கொண்டிருக்கின்றன என்பது நாமணைவரும் ஏற்றுக் கொள்ள வேண்டிய கசப்பான உண்மை. 

பிரியாங்காவின் வழக்கில் நடந்து முடிந்திருக்கின்ற என்கவுன்டரையும் அப்படித்தான் நான் பார்க்கின்றேன். ஆதலால்தான் அதனை மற்றவர்கள் போல என்னால் சத்தியமாக் கொண்டாட முடியவில்லை. கொண்டாடப்படவும் கூடாது.

மாறாக சட்ட ஒழுங்கின் எதிர்காலம் பற்றிய அச்சமே ஒரு பூதத்தைப் போல எழுந்து என்னை மிரட்டுகின்றது

கிண்ணியா சபருள்ளாஹ் 
2019-12-06
பிரியங்கா ரெட்டியை முன் வைத்து நடந்து முடிந்த என்கவுன்டர் பிரியங்கா ரெட்டியை முன் வைத்து நடந்து முடிந்த என்கவுன்டர் Reviewed by Madawala News on December 06, 2019 Rating: 5
'; (function() { var dsq = document.createElement('script'); dsq.type = 'text/javascript'; dsq.async = true; dsq.src = '//' + disqus_shortname + '.disqus.com/embed.js'; (document.getElementsByTagName('head')[0] || document.getElementsByTagName('body')[0]).appendChild(dsq); })();
Powered by Blogger.