கல் , மணல் ஆகியவற்றை கொண்டு செல்லவென பேர்மிட் வழங்குவது இன்று முதல் ரத்து செய்யப் படுகிறது. - Madawala News Number 1 Tamil website from Srilanka

கல் , மணல் ஆகியவற்றை கொண்டு செல்லவென பேர்மிட் வழங்குவது இன்று முதல் ரத்து செய்யப் படுகிறது.


கல் , மணல் ஆகியவற்றை கொண்டு செல்லவென பேர்மிட் வழங்குவது 
(போக்குவரத்து அனுமதிப்பத்திரங்கள்) இன்று முதல் இரத்துச் செய்யப்படவுள்ளன .


அமைச்சரவை இன்று மாலை ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச தலைமையில் கூடியபோது இந்த தீர்மானம் எடுக்கப்பட்டது. 


பெரும் வர்த்தகர்கள் இந்த அனுமதிப்பத்திரங்களை எடுத்து சட்டவிரோதமான செயற்பாடுகளில் ஈடுபடுவதாக இன்றைய அமைச்சரவை கூட்டத்தில் விவாதிக்கப்பட்டது. 


இதனையடுத்து உடனடியாக இதனை மீள்பரிசீலனை செய்யுமாறு ஜனாதிபதி பணிப்புரை விடுத்தார்.


இதேவேளை ஆயிரம் தேசிய பாடசாலைகளை அமைத்து மும்மொழிக் கொள்கையை அமுல்படுத்தவும் இன்றைய கூட்டத்தில் ஆராயப்பட்டுள்ளது.
அரச காணிகளை பகிர்வது தொடர்பான முகாமைத்துவம் குறித்தும் இங்கு பேசப்பட்டுள்ளது.
கல் , மணல் ஆகியவற்றை கொண்டு செல்லவென பேர்மிட் வழங்குவது இன்று முதல் ரத்து செய்யப் படுகிறது. கல் , மணல் ஆகியவற்றை கொண்டு செல்லவென பேர்மிட் வழங்குவது  இன்று முதல் ரத்து செய்யப் படுகிறது. Reviewed by Madawala News on December 04, 2019 Rating: 5