வெள்ள நீரில் பாதிக்கப்பட்ட இடங்களை ஆளுநர் எம். ஜே. எம். முஸம்மில் பார்வையிட்டார். - Madawala News Number 1 Tamil website from Srilanka

வெள்ள நீரில் பாதிக்கப்பட்ட இடங்களை ஆளுநர் எம். ஜே. எம். முஸம்மில் பார்வையிட்டார்.


-இக்பால் அலி-
இரு நாட்களுக்கு முன்னர் பெய்த கன மழை காரணமாக குருநாகல் மாநகர சபைக்கு உட்பட்ட
வில்கொடையில் அமைந்துள்ள நகர சபையில்  சேவை புரியும் தொழிலாளர்களுடைய 101 லயன் காம்பரக்கள் நீரிழ் மூழ்கின இடங்களை ஆளுநர்  எம். ஜே. எம். முஸம்மில் நேரில் சென்று பார்வையிட்டார்.


அம்மக்களுக்காக  ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் ஆட்சிகாலத்தில் தற்போதைய ஜனாதிபதி கோத்தபாய ராஜபக்ஷவின் நிர்வாகத்தின் கீழ் இருந்த நகர அபிவிருத்தி சபையினால் நிர்மாணிக்கப்பட்டு வந்த  வீடமைப்புத் திட்டத்தை கடந்த அரசாங்கத்தினால் இடைநிறுத்தப்பட்டுள்ளது.

அதற்கான  காரணத்தை முழுமையாகக் கண்டறிந்து மீண்டும் அவ்வேலைத் திட்டத்தை ஆரம்பிப்பதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு அதிகாரிகளுக்கு பணிப்புரை விடுத்துள்ளார்.


அதேவேளை இது தொடர்பாக ஆராய்வதற்கென அதிகாரிகளுடன் கலந்துரையாடலை விரைவில் நடத்துவதற்கான ஏற்பாடுகளை மேற்கொள்ளுமாறு அதிகாரிகளை வேண்டிக் கொண்டதுடன் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட அனைத்து மக்களுக்கும் தேவையான நடடிக்கைகளை உடனடியாக மேற்;கொள்ளுமாறு அதிகாரிகளுக்கு வேண்டுகோள் விடுத்தார்.
இதில் குருநாகல் மாநகர சபை முதல்வர் துசார சஞ்ஜீவ மற்றும் ஆளுநரின் இணைப்பாளர்  உமைர் முஸம்மில் உள்ளிட்டவர்கள் கலந்து கொண்டனர்.
இக்பால் அலி

03-12-2019   
வெள்ள நீரில் பாதிக்கப்பட்ட இடங்களை ஆளுநர் எம். ஜே. எம். முஸம்மில் பார்வையிட்டார். வெள்ள   நீரில் பாதிக்கப்பட்ட இடங்களை ஆளுநர்  எம். ஜே. எம். முஸம்மில் பார்வையிட்டார். Reviewed by Madawala News on December 04, 2019 Rating: 5