சுவர்களை அழகுபடுத்தும் திட்டத்தின் கீழ் புத்தளத்தில் விஜயன் குவேனியை சந்தித்த வரலாறு ஓவியம்... திறக்கும் தினத்தில் பலரின் பாராட்டையும் பெற்ற பெரும்பான்மை இன இளைஞர்கள் .


வெற்றுச் சுவர்களை அழகுபடுத்தும் திட்டத்தின் கீழ் புத்தளம் -கொழும்பு பிரதான வீதியில் தில்லையடி
ரயில்வேகடவைக்கு அருகில் உள்ள சிறிய கட்டடமொன்றின் சுவரில் புத்தளம் தம்பபண்ணி வரலாற்றைக்குறிக்கும்  ஓவியமொன்று வரையப்பட்டுள்ளது.

புத்தளம்,தில்லையடிப் பகுதிகளைச் சேர்ந்த பெரும்பான்மை இன இளைஞர்களின் ஏற்பாட்டில் குறித்த ஓவியம் வரையப்பட்டுள்ளது.

புத்தளம்பிரதேசத்தில் தம்பபண்ணி எனும் இடத்தில் விஜயன் குவேனியை சந்தித்த வரலாற்றை பிரதிபலிக்கின்ற வகையில் குறித்த படம் வரையப்பட்டுள்ளதாக ஏற்பாட்டாளர்கள் தெரிவிக்கின்றனர்.

இவ்வாறு வரையப்பட்டகுறித்த ஓவியம்  செவ்வாயக்கிழமை (10) உத்தியோகபூர்வமாக திறந்துவைக்கப்பட்டது.

இதன்போது இவற்றை வரைந்த பெரும்பான்மை இன இளைஞர்கள் இதனை திறந்து வைத்த தினம் பாதைகளில் கவனிப்பார் அற்று இருந்த முதியோர்கள் மற்றும் அனாதரவானவர்கள் சிலரை அழைத்து அவர்களை குளிப்பாட்டி, முடி வெட்டி , அவர்களுக்கு புது ஆடைகளை அணிவித்து அவர்களையும் அருகில்  வைத்துக் கொண்டே அதனை திறந்து வைத்தது பிரதேச மக்களால் பாராட்டு பெற்றுள்ளதாக அங்கிருக்கும் எமது செய்தியாளர் தெரிவித்தார்.

- Ilham -
சுவர்களை அழகுபடுத்தும் திட்டத்தின் கீழ் புத்தளத்தில் விஜயன் குவேனியை சந்தித்த வரலாறு ஓவியம்... திறக்கும் தினத்தில் பலரின் பாராட்டையும் பெற்ற பெரும்பான்மை இன இளைஞர்கள் . சுவர்களை அழகுபடுத்தும் திட்டத்தின் கீழ் புத்தளத்தில் விஜயன் குவேனியை சந்தித்த வரலாறு ஓவியம்... திறக்கும் தினத்தில் பலரின் பாராட்டையும் பெற்ற பெரும்பான்மை இன இளைஞர்கள் . Reviewed by Madawala News on December 12, 2019 Rating: 5
'; (function() { var dsq = document.createElement('script'); dsq.type = 'text/javascript'; dsq.async = true; dsq.src = '//' + disqus_shortname + '.disqus.com/embed.js'; (document.getElementsByTagName('head')[0] || document.getElementsByTagName('body')[0]).appendChild(dsq); })();
Powered by Blogger.