மழை வெள்ளத்தில் பாலம் உடைந்து போக்குவரத்து தடைபட்டது. - Madawala News Number 1 Tamil website from Srilanka

மழை வெள்ளத்தில் பாலம் உடைந்து போக்குவரத்து தடைபட்டது.


முல்லைத்தீவு மாவட்டத்தில் அண்மை நாட்களாக பெய்து வரும் கனமழை காரணமாக பல்வேறு பாதிப்புகள்

ஏற்பட்டு இருந்த நிலையில் நேற்று மாலை முதல் இன்று காலை வரை கொட்டித் தீர்த்த மழை காரணமாக மக்களின் இயல்பு வாழ்க்கை வெகுவாக பாதிக்கப்பட்டுள்ளது.

அந்த வகையில் முல்லைத்தீவு மாவட்டத்தின் புதுக்குடியிருப்பு முல்லைத்தீவு வரையான A  -35 வீதியில் 28 ஆவது கிலோ மீட்டர் பகுதியில் பாலம் ஒன்றில் ஏற்பட்டுள்ள பாதிப்பு நிலைகள் மற்றும் வீதியை குறுக்கறுத்து வெள்ளம் பாய்வதால் போக்குவரத்து முற்றாக பாதிக்கப்பட்டுள்ளது.

குறித்த பகுதியூடாக பரந்தனில் இருந்து புதுக்குடியிருப்பு முல்லைத்தீவு செல்கின்றவர்கள் மாற்று வழியாக மாங்குளம் வீதியை பயன்படுத்துமாறு மாவட்ட அரசாங்க அதிபர் கோரிக்கை விடுத்துள்ளார். அத்தோடு இன்று காலையில் பல்வேறு வீதிகளின் ஊடாக வெள்ளம் பாய்ந்து வருகின்ற நிலையில் க.பொ.த சாதாரண தர பரீட்சையில் பங்கு பெற்றுச் சென்ற மாணவர்கள் உள்ளிட்ட பலர் பல்வேறு சிரமங்களுக்கு மத்தியில் போக்குவரத்து மேற்கொள்வதை அவதானிக்கக் கூடியதாக இருந்தது.
மழை வெள்ளத்தில் பாலம் உடைந்து போக்குவரத்து தடைபட்டது. மழை வெள்ளத்தில் பாலம் உடைந்து போக்குவரத்து தடைபட்டது. Reviewed by Madawala News on December 06, 2019 Rating: 5