அரசியல் கொமிசனும் மழை காலத்தில் கொங்கிறீட் வீதிகளின் அவல நிலையும்.

காவத்தமுனை அனீஸ்
*****************************
கொமிஷனைக் கொள்ளையடிப்பதற்காக எவ்வீதியாக இருந்தாலும் சரி,
எவ்வாறு அமைக்கப் பட்டாலும் சரி,வடிகான் இருந்தாலும் சரி,இல்லாவிட்டாலும் சரி,தனக்கு கொமிஷன்களை வழங்கும் "கொன்ட்ரக்டர்"க்குதான் வீதி செப்பனிடுவதற்கு குடுப்பேன் என்று கங்கனம் கட்டி கொண்டு திரியும் அரசியல்வாதிகளை நினைக்கும் போது கவலையளிக்கிறது.

உண்மையிலயே இக் கொங்கிறீட் வீதிகள் அமைக்கப்படும் செயல்முறை சரிதானா என்று எந்த ஒரு அரசியல்வாதியாவது அவ் வீதி அமைக்கப் படும் போது அவ்விடத்துக்கு வருகை தந்து பார்த்ததுண்டா?அப்படி வந்தாலும் நான்தான் இவ் வீதிக்கு நிதி அளித்தேன் என்று விளம்பரப் படுத்துவதற்கு இரண்டு புகைப்படம் எடுப்பதற்காக வருவார்களே தவிர வேறில்லை.

அடுத்து சில "கொன்ட்ரக்டர்" 
அரசியல்வாதிக்கு கொமிஷனை கொடுத்து விட்டால் நாம் செய்யும் தரம் அற்ற வேலைகளை யாரும் கண்டு கொள்ள மாட்டார்கள்(நக்குண்டார் நாவிலந்தார்)என்ற தைரியத்தோடு அவ் வீதிகளை தரம் அற்ற முறையில் அமைக்கிறார்கள்.

உதாரணம்: சராசரியாக ஒரு 100 மீட்டர் வீதி அமைப்பதற்கு 150பக்கட் சீமெந்து,3டிப்பர் மண்(கொங்கிரீட் இடுவதற்கு தகுதியான மண்),5 டிப்பர் கொங்கிறீட் இடுவதற்கு பயன் படுத்தும் கல்,மற்றும் கம்பி,ஆகிய பொருட்கள் செலவாகும் என்றால்;

கொமிஷன் குடுத்து கொன்ட்ரக்டர் எடுக்கும் கொன்ட்ரக்டர்கள் அந்த கொமிஷனையும் சேர்த்து பக்கட்டை நிரப்புவதற்காக இதே 100மீட்டர் வீதியை அமைப்பதற்கு;நான் மேலே உதாரணத்திற்கு குறிப்பிட்ட கணக்கிலிருந்து சரி பாதியை மட்டுமே செலவு செய்கிறார்கள்.இதில் இவர்கள் செய்யும் ஆகயும் கேவலமான வேலைதான் ஒரு கொங்கிரீட் வீதி அமைப்பதற்கான தடிமன்"6" இஞ்ச் இருக்க வேண்டும்.
இந்த பன்னாடைகள் அந்த "6"தடிப்பத்தை இரு சைட்டிலும் வைத்து நடுவில் 4"இஞ்ச் கூட வராத அளவிற்கு மட்டப் படுத்தி வைத்திருப்பார்கள்.

தற்போதை சீரற்ற காலநிலையால் ஒவ்வொரு கொங்கிறீட் வீதிகளின் அவல நிலையை பார்க்கும் போது மிகவும் கவலையளிக்கிறது.குடுத்த கொமிஷனை விட அதிகமாக மழை நீர் தேங்கி நிற்கிறது.
ஆகவே மக்கள் இனிமேலாவது இப்படியான தரம் அற்ற  வீதியமைக்கும் பன்னாடைகள் உங்கள் வீதியயும் செப்பனிட வந்தால் சரியான பாடம் கற்பித்து கொடுக்க வேண்டப் படுகின்றீர்கள்.
குறிப்பு:வடிகான் இல்லாமல் வீதி அமைப்பதற்கு ஊர் மக்கள் ஏற்றுக் கொள்ள வேண்டாம் என்று கேட்டுக் கொள்ளப் படுகின்றீர்கள்.
அரசியல் கொமிசனும் மழை காலத்தில் கொங்கிறீட் வீதிகளின் அவல நிலையும். அரசியல் கொமிசனும் மழை காலத்தில் கொங்கிறீட் வீதிகளின் அவல நிலையும். Reviewed by Madawala News on December 07, 2019 Rating: 5
'; (function() { var dsq = document.createElement('script'); dsq.type = 'text/javascript'; dsq.async = true; dsq.src = '//' + disqus_shortname + '.disqus.com/embed.js'; (document.getElementsByTagName('head')[0] || document.getElementsByTagName('body')[0]).appendChild(dsq); })();
Powered by Blogger.