சுவிற்சலாந்து பணியாளர் விவகாரம் ஒரு சோடிக்கப்பட்ட சம்பவம் என ஜனாதிபதி தகவல் !


இலங்கைக்கான சுவிற்சலாந்து தூதரக பணியாளர் ஒருவர் கடத்தப்பட்டதாக
கூறப்படும் சம்பவம் குறித்தான
விசாரணையின்படி அதில் உண்மை இல்லை என்பதே இதுவரை அறியப்பட்ட விடயமாகுமென ஜனாதிபதி கோட்டாபய
ராஜபக்ச திட்டவட்டமாக தெரிவித்துள்ளார்.

இன்று மாலை ஆளுங்கட்சித் தலைவர்களின் கூட்டம் பிரதமர் மஹிந்த ராஜபக்சவின்
விஜேராம உத்தியோகபூர்வ இல்லத்தில்நடந்தது.

 பிரதமர் மஹிந்த மற்றும் கட்சி
தலைவர்கள் இதில் கலந்து கொண்டனர்.

இதில் கலந்துகொண்டு கட்சி
தலைவர்களுக்கு நாட்டின் தற்போதைய
நிலைமைகளை விளக்கிய ஜனாதிபதி, சுவிஸ்
தூதரக சர்ச்சை குறித்தும் நீண்ட
விளக்கமளித்தார்.

சி சி ரி வி கண்காணிப்பு கேமராக்கள்
பதிவுகளை கொண்டு நடத்தப்பட்ட ஆய்வில் குறிப்பிட்ட சம்பவ தினத்தன்று குறிப்பிட்ட
பெண் பணியாளர், அலுவலகம் அருகே வாடகை வாகனம் ஒன்றில் புறப்பட்டு பம்பலப்பிட்டிக்கு சென்று - அங்கு நேரத்தை கழித்து பின்னர் அங்கிருந்துதனது மாளிகாகந்தை பகுதி வீட்டிற்கு வாடகை கார் மூலம் சென்றமை தெரியவந்துள்ளதாகவும் -

வாடகை காரின் சாரதி ஒருவர் இது
தொடர்பில் கைது செய்யப்பட்டுள்ள தாகவும், வாடகை காரின் செயலி (அப்) மூலம் அது மேலும் உறுதி செய்யப்பட்டுள்ளதாகவும்
ஜனாதிபதி இங்கு குறிப்பிட்டுள்ளார்.

மேலும் பல விபரங்கள் தொழிநுட்ப ரீதியாக நிரூபணம் செய்யப்பட்டுள்ளதால் இதன்
பின்னணியில் யாராவது இருந்து
இயக்கினார்களா அல்லது இது தனிப்பட்ட பிரச்சினையா என்பதை பணியாளரின் வாக்குமூலத்தை பெற்ற பின்னர் உறுதிப்படுத்தக் கூடியதாக இருக்குமெனவும் -சட்டமும் நீதித்துறையும் தனது கடமையை
செய்யும் என்றும் இங்கு குறிப்பிட்ட ஜனாதிபதி நாட்டுக்கு ஏற்பட்ட அவப்பெயரை நீக்கி உண்மையை வெளிக்கொணர தமது அரசு
தயங்காதெனவும் இங்கு குறிப்பிட்டுள்ளார்.

நன்றி : சிவா ராமசாமி
சுவிற்சலாந்து பணியாளர் விவகாரம் ஒரு சோடிக்கப்பட்ட சம்பவம் என ஜனாதிபதி தகவல் ! சுவிற்சலாந்து  பணியாளர் விவகாரம் ஒரு  சோடிக்கப்பட்ட சம்பவம் என  ஜனாதிபதி  தகவல் ! Reviewed by Madawala News on December 03, 2019 Rating: 5
'; (function() { var dsq = document.createElement('script'); dsq.type = 'text/javascript'; dsq.async = true; dsq.src = '//' + disqus_shortname + '.disqus.com/embed.js'; (document.getElementsByTagName('head')[0] || document.getElementsByTagName('body')[0]).appendChild(dsq); })();
Powered by Blogger.