எதிர்வரும் பொதுத் தேர்தலில் சிறுபான்மை சமூகம் பிரதமரை தீர்மானிக்கும் சக்தியாக மாறும்.


எதிர்வரும் பொதுத்தேர்தலில் சிறுபான்மை சமூகம் பிரதமரை தீர்மானிக்கும் சக்தியாக மாறும் என திருகோணமலை
மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் அப்துல்லா மஃறூப் தெரிவித்தார்.


கிண்ணியா பகுதியில் இன்று (04) இடம் பெற்ற மக்கள் சந்திப்பில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே இவ்வாறு தெரிவித்தார் தொடர்ந்தும் தெரிவிக்கையில்

வடகிழக்கிலும் அதிகூடிய ஆசனங்களை பெற்றும் வட கிழக்குக்கு வெளியிலும் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தமிழ் முஸ்லிம் சிங்கள பிரதிநிதித்துவங்களை பிரதிநிதித்துவப்படுத்தக்கூடிய ஆசனங்களை இம் முறை பெற்றுக் கொள்ளும் .

அதி உச்ச அதிகாரம் கொண்ட சபையாக நாடாளுமன்றம் திகழ்கிறது அனைத்து சிறுபான்மை கட்சிகளும் இணைந்து சஜீத் பிரேமதாசவை பிரதமராக பெரும்பான்மை ஆசனத்துடன் கொண்டு வருவோம்

 .19 ஆவது திருத்தத்தில் ஜனாதிபதிக்கான அதிகாரம் குறைக்கப்பட்டுள்ளது இம் முறை நடை பெற்ற ஜனாதிபதி தேர்தலில் மூதூர் தொகுதியில் 92 வீதமான வாக்குகள் புதிய ஜனநாயக முன்னனிக்கு கிகைக்கப்பெற்றுள்ளது

 இதனை சிறுபான்மை சமூகம் உணர்ந்து கொண்டுள்ளது 113 ஆசனங்களையாவது பெற்றே பெரும்பான்மையை நிரூபித்து நாட்டின் அதி உச்ச அதிகாரம் கொண்ட சபைபை கைப்பற்ற எல்லோரும் ஒன்றினைய வேண்டும் .


அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தேசிய மட்டத்தில் கூடிய பிரதிநிதிகளை இம் முறை பெற்று சிறுபான்மையின் பலத்தை மீண்டும் நிரூபித்துக் காட்டும்  முஸ்லிம் சமூகம் ஒன்றுபட்டுள்ளது கட்சி பேதங்களை மறந்து

அதிகூடிய ஆசனங்களுடன் நாம் இந்த நாட்டின் பாராளுமன்றத்தின் பெரும்பான்மை ஆசனங்களை தக்க வைத்துக் கொள்ள வேண்டும் .ஜனநாயக வழியில் மீண்டும் நாட்டை முன்னேற்றத்திற்கு கொண்டு செல்ல வேண்டும்

இதற்காக அனைவரினதும் மக்களினதும் ஆணையைப் பெற்று இம் முறை தேர்தலில் முகங்கொடுக்கவுள்ளோம்.  தலைவர் றிசாத் மீது பொய்யான குற்றச்சாட்டுக்களை மீண்டும் முன்வைத்து மக்களை திசை திருப்பவும் அரசியல் காழ்ப்புணர்ச்சி கொண்டவர்களாகவும் செயற்படுகிறார்கள் .அரசியல் பழி தீர்க்கும் விடயமாகவும் சிந்திக்கிறார்கள் என்றார்.

--
Hasfar A Haleem BSW (Hons)
எதிர்வரும் பொதுத் தேர்தலில் சிறுபான்மை சமூகம் பிரதமரை தீர்மானிக்கும் சக்தியாக மாறும். எதிர்வரும்  பொதுத் தேர்தலில் சிறுபான்மை சமூகம் பிரதமரை தீர்மானிக்கும் சக்தியாக மாறும். Reviewed by Madawala News on December 04, 2019 Rating: 5