பௌஸியை எம்.பி பதவியிலிருந்து நீக்கும் கடிதத்தில் ஒப்பமிட்டார் அமரவீர.. ஒரு மாதத்தில் பதவி இரத்தாகும் . - Madawala News Number 1 Tamil website from Srilanka

பௌஸியை எம்.பி பதவியிலிருந்து நீக்கும் கடிதத்தில் ஒப்பமிட்டார் அமரவீர.. ஒரு மாதத்தில் பதவி இரத்தாகும் .


பாராளுமன்ற உறுப்பினர் ஏ.எச்.எம்.பெளசியை ஸ்ரீ லங்கா 
சுதந்திரக் கட்சியிலிருந்தும் நீக்­குவதற்கான கடிதத்தில் நான் கையொப்பமிட்டு விட்டேன்.


 இன்னும் ஒரு மாத காலத்தில்அவ­ரது பாராளுமன்ற உறுப்பினர் பத­வியும் இரத்தாகும். அவர் விரும்­பினால் நீதிமன்றினை நாடலாம் என ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்ட­மைப்பின் செயலாளரும் அமைச்சரு­மான மஹிந்த அமரவீர தெரி­வித்தார்.சபுகஸ்கந்தை எண்ணெய் சுத்திக­ரிப்பு நிலையத்தைப் பார்வையிடச் சென்ற அமைச்சர் மஹிந்த அமரவீர ஊடகவியலாளர்களின் கேள்விக­ளுக்குப் பதிலளிக்கையிலே இவ்­வாறு கூறினார்.


 அவர் தொடர்ந்தும் பதிலளிக்கையில்,
“ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் கொள்கைகளுக்கு முரணாக கட்­சியின் கட்டுப்பாட்டினை மீறியத­னாலே இத்தீர்மானம் எடுக்கப்பட்டது. 


பெளசி மாத்திரமல்ல கட்சியின் கொள்கைகளுக்குப் பாதிப்பை ஏற்­படுத்தும் வகையில் கட்சியின் கட்­டுப்பாட்டினை மீறி செயற்பட்ட பாராளுமன்ற உறுப்பினர்கள், மாகாண சபை மற்றும் பிரதேச சபை உறுப்பினர்கள் அனைவ­ரையும் கட்சியிலிருந்து நீக்குவ­தற்கு கட்சியின் மத்திய செயற்குழு தீர்மானித்துள்ளது.இத்தீர்மானம் எதிர்வரும் காலங்களில் நிறைவேற்றப்படும். 


ஒழுக்காற்று விசாரணை களின் பின்பு அவர்களுக்கு எதிரான நடவடிக்கை முன்னெடுக்கப்படும் என்றார்.

-Vidivelli
ஏ.ஆர்.ஏ.பரீல்
பௌஸியை எம்.பி பதவியிலிருந்து நீக்கும் கடிதத்தில் ஒப்பமிட்டார் அமரவீர.. ஒரு மாதத்தில் பதவி இரத்தாகும் . பௌஸியை எம்.பி பதவியிலிருந்து நீக்கும் கடிதத்தில் ஒப்பமிட்டார் அமரவீர.. ஒரு மாதத்தில் பதவி இரத்தாகும் . Reviewed by Madawala News on December 04, 2019 Rating: 5