திருகோணமலையில் அதிக மழை காரணமாக வீதிகள் வெள்ளத்தில் மூழ்கின. - Madawala News Number 1 Tamil website from Srilanka

திருகோணமலையில் அதிக மழை காரணமாக வீதிகள் வெள்ளத்தில் மூழ்கின.


-ஹஸ்பர் ஏ ஹலீம்-
திருகோணமலை மாவட்டம் தம்பலகாமம் பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட பாத்திமா
பாலிகாவித்தியாலயத்தின் வீதி ஊடாக அதிக மழை காரணமாக அப்பகுதி இன்று (03) மாலை வேலையில் வெள்ளத்தில் மூழ்கியுள்ளன..

இன்று மாலை பெய்த கடும் அடை மழை காரணமாக இவ்வாறான நிலைமை ஏற்பட்டுள்ளதுடன் இதனால் போக்குவரத்து தடைப்பட்டுள்ளதுடன் நீர் வடிந்தோடக்கூடிய வகையில் உரிய பகுதியில் வடிகான்களோ எதுவுமின்மை காரணமாக குடியிருப்பு பகுதிகளுக்கும் நீர் உட்புகுவதற்கான சாத்தியக்கூறுகள் காணப்படுவதாக பிரதேச மக்கள் தெரிவிக்கின்றனர்.

இது தொடர்பில் நீர் வடிந்தோடக்கூடியவாறும் மக்களின் வீடுகளுக்குள் நீர் உட்புகாமல் பாதுகாப்பு நடவடிக்கைகளை உரிய அதிகாரிகள் மேற்கொள்ள வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுக்கின்றனர்
திருகோணமலையில் அதிக மழை காரணமாக வீதிகள் வெள்ளத்தில் மூழ்கின. திருகோணமலையில் அதிக  மழை காரணமாக வீதிகள் வெள்ளத்தில் மூழ்கின. Reviewed by Madawala News on December 04, 2019 Rating: 5