சீனர்களுக்குத் திருமணம் செய்யப்பட்டு பாலியல் தொழிலில் ஈடுபடுத்தப்படும் பாகிஸ்தான் பெண்கள். இதுவரை 629 பேர் பாதிப்பு. - Madawala News Number 1 Tamil website from Srilanka

சீனர்களுக்குத் திருமணம் செய்யப்பட்டு பாலியல் தொழிலில் ஈடுபடுத்தப்படும் பாகிஸ்தான் பெண்கள். இதுவரை 629 பேர் பாதிப்பு.


பாகிஸ்தான் பெண்கள் 629 பேர்  சீனர்களுக்குத் திருமணம் செய்யப்பட்டுக் கடத்தப்பட்டதாகப் பாகிஸ்தான்
அதிகாரிகள் நடத்திய புலன் விசாரணையில் தெரிய வந்துள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் தகவலை வெளியிட்டுள்ளது.
https://apnews.com/c586d0f73fe249718ec06f6867b0244e
பாகிஸ்தானில் பணத்துக்காக ஏழைப் பெண்கள் சீனர்களுக்குத் திருமணம் செய்து வைக்கப்படும் சம்பவங்கள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன.

பாகிஸ்தான் பெண்கள் சீனர்களின் மனைவிகளாகச் சீனாவுக்கு அழைத்துச் செல்லப்பட்டாலும் அங்கு அவர்கள் தனிமைப்படுத்தப்பட்டு பாலியல் தொழிலில் ஈடுபடுத்தப்படுவதாகத் தெரிவிக்கப்படுகின்றது.

சீனாவுக்கு அழைத்துச் செல்லப்படும் பெண்கள் தங்கள் குடும்பத்தினரைத் தொடர்பு கொண்டு தங்களை மீட்குமாறு கெஞ்சுவதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

பெண்கள் திருமணமாகி சீனாவுக்குக் கடத்தப்படுவதைத் தடுக்க பாகிஸ்தான் அதிகாரிகள் புலன் விசாரணை மேற்கொண்டனர். இதில் 629 பெண்கள் சீனர்களுக்குத் திருமணம் செய்யப்பட்டுக் கடத்தப்பட்டதாகத் தெரியவந்துள்ளது.

இந்த விசாரணைகளால் சீனாவுடனான நட்புறவில் பாதிப்பு ஏற்படும் என்று பாகிஸ்தான் அரசாங்கம் அஞ்சுகிறது. இதையடுத்து இது தொடர்பான விசாரணைகளுக்குப் பாகிஸ்தான் அரசு முட்டுக்கட்டை போட்டு வருவதாகத் தன்னார்வலர்கள் தெரிவித்துள்ளனர்.

இந்நிலையில், பெண்கள் கடத்தல் வழக்கில் கைது செய்யப்படும் சீனர்கள் பலர் பின்னர் விடுவிக்கப்பட்டதாகவும் தெரிவித்தனர்.

அத்தோடு, பாகிஸ்தான் பெண்களைத் திருமணம் செய்து சீனாவுக்குக் கடத்தி சென்றாலும் சட்டம் தங்களை எதுவும் செய்யாது என்ற தைரியத்தில் இந்த குற்றத்தில் சிலர் தொடர்ந்து ஈடுபட்டு வருவதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
சீனர்களுக்குத் திருமணம் செய்யப்பட்டு பாலியல் தொழிலில் ஈடுபடுத்தப்படும் பாகிஸ்தான் பெண்கள். இதுவரை 629 பேர் பாதிப்பு.  சீனர்களுக்குத் திருமணம் செய்யப்பட்டு பாலியல் தொழிலில் ஈடுபடுத்தப்படும் பாகிஸ்தான் பெண்கள். இதுவரை 629 பேர் பாதிப்பு. Reviewed by Madawala News on December 05, 2019 Rating: 5