தெற்காசிய விளையாட்டு விழா சென்ற 6 இலங்கை வீரர்களுக்கு டெங்கு.

13ஆவது தெற்காசிய விளையாட்டு விழாவில் பங்குபற்றுவதற்காக 
நேபாளம் சென்ற  இலங்கையின் ஆறு வீரர்கள் டெங்கு காய்ச்சலினால் பீடிக்கபபட்டுள்ளனர்.

 இந்த அறுவரும நேபாளத்தின் கத்மண்டு, தனியார் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றுவருகின்றனர். 


அதில் ஓருவர் தீவிரசிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் அறியக்கிடைக்கின்றது.


நேபளத்தின் மற்றொரு பெரிய நகரமான பொக்காரவில் இருந்த இலங்கை வீரர்கள் மூருவருக்கு டெங்கு நோய் பாதிப்பு ஏற்பட அவர்கள் விமானம் மூலம் கத்மண்டு நகருக்கு அழைத்து வரப்பட்டுள்ளனர்.


 தனியார் மருத்துவமனை என்பதால் சிகிச்சை அதிக பணம் செலவிடப்படுவதுடன் அனைத்து செலவுகளையும் விளையாட்டுத்துறை அமைச்சே பொறுப்பேற்றுள்ளது.


இவர்களை உடனடியாக நாட்டுக்கு திருப்பி அனுப்புவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. நோய்வாய்பட்டுள்ள அவர்களை 4 மணித்தியாலயத்திற்கும் மேற்பட்ட விமானப் பயணத்தில் அனுப்பிவைப்பது சிக்கலுக்குரிய விடயம் எனத் தெரிவிக்கப் படுகின்றது.

நேபாளத்திலிருந்து எஸ்.ஜே.பிரசாத்
மெட்ரோ

தெற்காசிய விளையாட்டு விழா சென்ற 6 இலங்கை வீரர்களுக்கு டெங்கு. தெற்காசிய விளையாட்டு விழா சென்ற 6 இலங்கை வீரர்களுக்கு டெங்கு. Reviewed by Madawala News on December 07, 2019 Rating: 5
'; (function() { var dsq = document.createElement('script'); dsq.type = 'text/javascript'; dsq.async = true; dsq.src = '//' + disqus_shortname + '.disqus.com/embed.js'; (document.getElementsByTagName('head')[0] || document.getElementsByTagName('body')[0]).appendChild(dsq); })();
Powered by Blogger.