வட மாகாணத்தில் சில இடங்களில் இன்று 200 மில்லி மீற்றருக்கும் அதிகமான பலத்த மழை எதிர்பார்ப்பு.


வட மாகாணத்தில் சில இடங்களில் இன்று 200 மில்லி 
மீற்றருக்கும் அதிகமான பலத்த மழை பெய்யும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வுகூறியுள்ளது.


ஊவா, வடமத்திய மற்றும் கிழக்கு மாகாணங்களிலும் நுவரெலியா மாவட்டத்திலும் சில இடங்களில் 150 மில்லி மீற்றர் வரையான மழை வீழ்ச்சி பதிவாகக் கூடும்.


இதேபோன்று மேல் மாகாணத்திலும் சுமார் 100 மில்லி மீற்றர் மழை பெய்யக்கூடும். நாட்டை சுற்றியுள்ள கடற் பிரதேசங்களில் அடிக்கடி கடும் காற்று வீசக்கூடும்.


வடக்கு, வடமத்தி, வடமேல், மத்தி மற்றும் ஊவா மாகாணங்களிலும் திருகோணமலை மாவட்டத்திலும் காற்றின் வேகமானது மணித்தியாலத்திற்கு 50 கிலோ மீற்றர் வரை அதிகரிக்கக்கூடும்.


கடுமையான இடி மின்னல் தாக்கம் தொடர்பாக பொது மக்கள் பாதுகாப்பாக இருக்குமாறு திணைக்களம் மேலும் அறிவித்துள்ளது
வட மாகாணத்தில் சில இடங்களில் இன்று 200 மில்லி மீற்றருக்கும் அதிகமான பலத்த மழை எதிர்பார்ப்பு. வட மாகாணத்தில் சில இடங்களில் இன்று 200 மில்லி  மீற்றருக்கும் அதிகமான பலத்த மழை எதிர்பார்ப்பு. Reviewed by Madawala News on December 06, 2019 Rating: 5
'; (function() { var dsq = document.createElement('script'); dsq.type = 'text/javascript'; dsq.async = true; dsq.src = '//' + disqus_shortname + '.disqus.com/embed.js'; (document.getElementsByTagName('head')[0] || document.getElementsByTagName('body')[0]).appendChild(dsq); })();
Powered by Blogger.