இலங்கை முஸ்லிம்களின் சிந்தனைக்கு தேர்தல் தரும் பாடம்!


அமானுல்லாஹ் கமாலுத்தீன் (குளோபல் தஃவா சேவை - லண்டன்)
(நபியே!) நீர் கூறுவீராக: 'அல்லாஹ்வே! ஆட்சிகளுக்கெல்லாம் அதிபதியே!
நீ யாரை விரும்புகிறாயோ அவருக்கு ஆட்சியைக் கொடுக்கின்றாய்; இன்னும் ஆட்சியை நீ விரும்புவோரிடமிருந்து அகற்றியும் விடுகிறாய்; நீ நாடியோரை கண்ணியப்படுத்துகிறாய்; நீ நாடியவரை இழிவு படுத்தவும் செய்கிறாய்; நன்மைகள் யாவும் உன் கைவசமேயுள்ளன அனைத்துப் பொருட்கள் மீதும் நிச்சயமாக நீ ஆற்றலுடையவனாக இருக்கின்றாய்.' (3:26)


கடந்த தேர்தல் காலங்களில் முஸ்லிம்கள் சிந்தித்து செயல்படாத அனேக விடயங்களிருக்கின்றன.


முஸ்லிம்களிடம் அல்லாஹ்வைப் பற்றிய நம்பிக்கை குறைவாக தேர்தல் காலங்களில் இருந்ததை அவதாணிக்க முடிந்தது.

ஒருவரை ஒருவர் குறை கூறுவதும், புறம் பேசுவதும். ஏளனமாகப் பேசுவதும், ஒரு முஸ்லிம் மற்ற முஸ்லிமை தூற்றிக் கொண்டும் வசைபாடிக் கொண்டும் இருந்தை சர்வசாதரணமாகக் காண முடிந்தது.

அவரவரது தலைவரைத் தெரிவு செய்யும் உரிமை ஒவ்வொருவருக்கும் உண்டு. அதற்கு மற்றவர்களை நிர்ப்ந்திக்கும் உரிமை யாருக்கும் கிடையாது.


அவர் வந்தால் அநியாயம்  தலை தூக்கும் என்றும். இவர் வந்தால் காப்பாற்றுவார் என்றும் முஸ்லிம்களுடயை நம்பிக்கை அரசியல் தலைவர்களின்; பக்கம் சென்றிருந்ததைக் காண முடிந்தது.


நன்மை தீமைகள் அல்லாஹ்வின் கைவசமே உள்ளன என்ற நம்பிக்கை மிகவும் குறைவாகவே காணப்பட்டது.


முஸ்லிம்கள் அல்லாஹ்வைக் கொண்டே அனைத்தும் ஆகுகின்றன என்ற நம்பிக்கையை வலுவாக வளர்த்துக் கொள்ள வேண்டிய கால கட்டம் இது. நல்ல தலைவர் என்று நாம் நினைக்கக் கூடியவர் தீமையைக் கொண்டு வரக் கூடும். தீய தலைவர் என்று நாம் நினைக்கக் கூடியவர் நன்மையைக் கொண்டு வரக் கூடும். எந்த ஒரு தலைவரும் நன்மை செய்யவோ தீமை செய்யவோ அல்லாஹ்வின் நாட்டம் இன்றி இயலாது.  நல்லவரா கெட்டவரா என்பதை  தீரமாணிக்கும் சக்தி அல்லாஹ்வுக்கு மட்டுமே உண்டு.


சில வேளைகளில் அல்லாஹ் விசுவாசிகளை வெற்றி தோல்வி கொண்டு சோதிப்பான். சில வேளைகளில் வெற்றி ஆபத்தாக முடியும். தோல்வி நன்மையானதாக அமையும். சில வேளை நம்முடைய குற்றங்கள் காரணமாக அல்லாஹ் கொடூரமான ஆட்சியாளர்களைக் கொண்டு சோதிக்க கூடும்.


இந்த தேர்தல் முஸ்லிம்களுக்கு புகட்டும் பாடம் என்ன வென்றால்

முஸ்லிம்கள் ஒற்றுமையாகவும் ஒருவரை ஒருவர் மதித்தும் நடப்பதுடன், அல்லாஹ்வின் மீது முழுமையான நம்பிக்கையை வைத்து அந்நிய மக்களுடனும் எதிர் கட்சிக் காரர்களுடனும்  நற்பண்;புகளுடன் நடந்து கொள்வதுடன் நாட்டுடைய சட்டங்களையும் மதித்து நடந்து கொள்ள வேண்டும். குறிப்பாக முஸ்லிம்கள் தமது மார்க்க அடையாளங்களைப் பேணி மார்க்க விளிம்புக்குள் மற்ற சமுகங்களுடன் கலந்து ஒரு விசுவாசமான இலங்கைப் பிரஜையாக வாழ முயற்சிக்க வேண்டும்.


எமது ஈமானை அல்லாஹ்வின் பக்கம் திருப்புவோமாக! ஆட்சியாளர்களின் மீது நம்பிக்கை வைப்பதை விடுத்து ஆட்சியாளர்களுக்கு எல்லாம் ஆட்சியாளராகிய அல்லாஹ்வின் பக்கம் திரும்புவோமாக!
இலங்கை முஸ்லிம்களின் சிந்தனைக்கு தேர்தல் தரும் பாடம்! இலங்கை முஸ்லிம்களின் சிந்தனைக்கு தேர்தல் தரும் பாடம்! Reviewed by Madawala News on November 18, 2019 Rating: 5
'; (function() { var dsq = document.createElement('script'); dsq.type = 'text/javascript'; dsq.async = true; dsq.src = '//' + disqus_shortname + '.disqus.com/embed.js'; (document.getElementsByTagName('head')[0] || document.getElementsByTagName('body')[0]).appendChild(dsq); })();
Powered by Blogger.