அடுத்த பொதுத் தேர்தல் தொடர்பில் தீர்மானம்.. சிறப்பு அறிக்கை வெளியிட்டார் ரணில்.

அடுத்த பொதுத் தேர்தல் தொடர்பில் சபாநாயகர்  மற்றும் நாடாளுமன்றக்
 கட்சிகளின் கூட்டத்தில் தீர்மானிக்கப்படும்  என்று பிரதமர் ரணில் விக்கிரமசிங்க அறிவித்துள்ளார்.


பிரதமர் வெளியிட்டுள்ள சிறப்பு அறிக்கையிலேயே இதனைச் சுட்டிக்காட்டினார்.


சபாநாயகர் தலைமையில் அரச நாடாளுமன்ற உறுப்பினர்கள், நாடாளுமன்றக் கட்சிகளின் தலைவர்களை உள்ளடக்கிய கூட்டத்தை கூட்டி நாடாளுமன்றத்தைக் கலைத்து பொதுத் தேர்தலுக்குச் செல்வதற்கான தீர்மானம் எடுக்கப்படும்  என்று பிரதமர் ரணில் விக்கிரமசிங்க அதில் குறிப்பிட்டார்.நாட்டின் 7ஆவது ஜனாதிபதியாக கோத்தாபய ராஜபக்ச தெரிவு செய்யப்பட்டுள்ளார். 


அவர் நாளைக் காலை அநுராதபுரத்தில் பதவியை ஏற்று முற்பகல் 11 மணிக்கு கடமைகளை ஏற்பார் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.


இந்த நிலையில் நாடாளுமன்றின் அங்கீகாரத்துடன் நாடாளுமன்றைக் கலைத்து பொதுத் தேர்தலுக்குச் செல்ல பிரதமர் ரணில் விக்கிரமசிங்க, யோசனை முன்வைத்துள்ளார்.


இதேவேளை, வரும் மார்ச் மாதம் நடுப்பகுதிக்குப் பின்னரே ஜனாதிபதி நாடாளுமன்றைக் கலைக்க முடியும். எனினும் பொதுத் தேர்தலுக்குச் செல்லும் பிரேரணை நிறைவேற்றப்பட்டால் நாடாளுமன்றை நான்கரை ஆண்டுகளுக்கு முன்பே கலைக்க முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.

– முதல் வன் _

அடுத்த பொதுத் தேர்தல் தொடர்பில் தீர்மானம்.. சிறப்பு அறிக்கை வெளியிட்டார் ரணில். அடுத்த பொதுத் தேர்தல் தொடர்பில் தீர்மானம்..  சிறப்பு அறிக்கை வெளியிட்டார் ரணில்.  Reviewed by Madawala News on November 17, 2019 Rating: 5