கோத்தாபய ராஜபக்சவிற்கு ஆதரவாக வாக்களித்த அனைத்து இரத்தினபுரி மாவட்ட முஸ்லீம்களுக்கும் ஸ்ரீலங்கா பொதுஜென பெரமுன முஸ்லிம் சம்மேளனம் நன்றி தெரிவித்தது.


எம்.எல்.எஸ்.முஹம்மத்
இம்முறை இடம்பெற்ற ஜனாதிபதித் தேர்தலில் ஸ்ரீலங்கா பொதுஜென
 பெரமுனவின்  ஜனாதிபதி வேட்பாளர் கோத்தாபய ராஜபக்சவிற்கு ஆதரவாக வாக்களித்த அனைத்து இரத்தினபுரி மாவட்ட முஸ்லீம்களுக்கும் ஸ்ரீலங்கா பொதுஜென பெரமுனவின்  இரத்தினபுரி மாவட்ட முஸ்லிம் சம்மேளனம் நன்றி தெரிவித்துள்ளது.

மேற்படி  மாவட்ட முஸ்லிம் சம்மேளனத்தின் தலைவர் அல்ஹாஜ் ஏ.எம்.இஸ்மத் மற்றும் அதன் செயலாளர் அல்ஹாஜ்.எம்.பி.எம்.பைரூஸ் ஆகியோர் இணைந்து இது தொடர்பான அறிக்கை ஒன்றினையும் இன்று (17) வெளியிட்டுள்ளனர்.

எமது நாட்டின் 8ஆவது ஜனாதிபதியாக தெரிவு செய்யப்படவுள்ள கோத்தாபய ராஜபக்சவின் வெற்றி இந்நாட்டின் சிங்கள மக்களினுடைய வெற்றி மாத்திரமல்ல.மாறாக இது எமது நாட்டை மீண்டும்  துரித முன்னேற்றப் பாதையில் அழைத்துச் செல்வதற்கு கிடைக்கப் பெற்றுள்ள தேசிய வெற்றியாகும்.இந்த வெற்றிக்கு சிங்கள மக்களின் வாக்குகள் மிகக் கூடுதலாக கிடைக்கப்பெற்றுள்ள அதேநேரம் தமிழ் மற்றும் முஸ்லிம் மக்களின் ஏராளமான வாக்குகளும் கிடைக்கப் பெற்றுள்ளன.குறிப்பாக எமது முஸ்லிம் சம்மேளனத்தின் வேண்டுகோளிக்கு இணங்க இரத்தினபுரி மாவட்டத்தைச் சேர்ந்த பல்லாயிரக்கணக்கான முஸ்லீம்கள் ஜனாதிபதி வேட்பாளர் கோத்தாபய ராஜபக்சவிற்கு ஆதரவாக வாக்களித்துள்ளனர்.இந்த வரலாற்று முக்கியத்தும் மிக்க ஆதரவை இரத்தினபுரி மாவட்ட  முஸ்லிம் சம்மேளனம் மிகப் பெருமையுடன் நோக்குகிறது எனவும்  அவ்வறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

மிக விரைவில் இரத்தினபுரி மாவட்ட முஸ்லிம் சமூக அபிவிருத்தி தொடர்பாக மாவட்ட முஸ்லிம் சம்மேளனம் பிராந்திய இணைப்பாளர்களின்  ஒத்துழைப்புடன் உரிய நடவடிக்கைகளை  முன்னெடுக்கவுள்ளது எனவும் மேலும் அவ்வறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
கோத்தாபய ராஜபக்சவிற்கு ஆதரவாக வாக்களித்த அனைத்து இரத்தினபுரி மாவட்ட முஸ்லீம்களுக்கும் ஸ்ரீலங்கா பொதுஜென பெரமுன முஸ்லிம் சம்மேளனம் நன்றி தெரிவித்தது. கோத்தாபய  ராஜபக்சவிற்கு ஆதரவாக வாக்களித்த அனைத்து இரத்தினபுரி மாவட்ட முஸ்லீம்களுக்கும் ஸ்ரீலங்கா பொதுஜென பெரமுன முஸ்லிம் சம்மேளனம் நன்றி தெரிவித்தது.  Reviewed by Madawala News on November 17, 2019 Rating: 5
'; (function() { var dsq = document.createElement('script'); dsq.type = 'text/javascript'; dsq.async = true; dsq.src = '//' + disqus_shortname + '.disqus.com/embed.js'; (document.getElementsByTagName('head')[0] || document.getElementsByTagName('body')[0]).appendChild(dsq); })();
Powered by Blogger.