சம்மாந்துரைக்கு தனி தமிழ் பிரதேச செயலகம் ; ரனிலுடனான பேச்சுவார்த்தையில் இணக்கம் .. - Madawala News Number 1 Tamil website from Srilanka

சம்மாந்துரைக்கு தனி தமிழ் பிரதேச செயலகம் ; ரனிலுடனான பேச்சுவார்த்தையில் இணக்கம் ..
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் அம்பாறை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் ஏ.கே. கோடீஸ்வரன்
தலைமையிலான குழுவொன்று பிரதமர் ரணில் விக்ரமசிங்கவை  வெள்ளிக்கிழமை மாலை 5.30 மணிக்கு கொழும்பில் சந்துத்து பேச்சுவார்த்தை நடத்தி பல்வேறு இணக்கப்பாடுகள் எட்டப்பட்டுள்ளதாக கூறப்பட்டது.

அம்பாறை மாவட்ட தமிழ் மக்களின்  நோக்கும் சவால்கள் தேவைகள்  மற்றம் ஜனாதிபதி தேர்தலின் போது அம்பாறை  தமிழ் மக்களின் வாக்களிப்பு எவ்வாறு அமையவேண்டும்  என்பதைத்  தீர்மானிப்பது தொடர்பாக விரிவாக கலந்துரையாடப்பட்டுள்ளது.

அம்பாறை தமிழ்ப்பிரதேச சபைகளின்த விசாளர்கள் புத்திஜீவிகள் அடங்கிய குழு அதற்கான திட்டமுன்வரைவினை தயாரித்துள்ள நிலையில் அதற்கு பிரதமர் ரணில் இணக்கம்  வெளியிட்டுள்ளதாகவும் கூறப்பட்டது.

சம்மாந்துரைக்கு தனி பிரதேச செயலகம், தனி கல்வி வலயம்,பொத்துவில்லுக்கு தனி பிரதேச செயலகம் உள்ளிட்ட கோரிக்கை முன்வைக்கப்பட்டுள்ளதாக கூறப்பட்டது.
சம்மாந்துரைக்கு தனி தமிழ் பிரதேச செயலகம் ; ரனிலுடனான பேச்சுவார்த்தையில் இணக்கம் .. சம்மாந்துரைக்கு தனி தமிழ் பிரதேச செயலகம் ; ரனிலுடனான பேச்சுவார்த்தையில் இணக்கம் .. Reviewed by Madawala News on November 11, 2019 Rating: 5