மீலாதுன் நபி தினத்தையிட்டு கஹட்டோவிட "முஅஸ்கருர் றஹ்மான் மகளிர் அரபுக் கல்லூரி" ஒழுங்கு செய்த முன்மாதிரியான செயல்.


நேசம் என்பது யாது எனில்.....
(நேசத்தின் புதுமுயற்சி) 
மீலாதுன் நபி தினத்தையிட்டு கஹடோவிட "முஅஸ்கருர் றஹ்மான் மகளிர் அரபுக் கல்லூரி" நிர்வாகத்தினர் இணைந்து இன்று அற்புதமான நிகழ்வொன்றை ஒழுங்குசெய்திருந்தார்கள். 

அதாவது எமது வதுபிடிவெல தள வைத்தியசாலையின் " பிள்ளைப் பேறு வோட்" தொகுதிக்குச் சென்று கர்ப்பிணித்  தாய்மாருக்கும், அவர்களின் குழந்தைகளுக்கும் தேவையான பெறுமதியான பொருட்களை வழங்கி வைத்தார்கள்.

பொருட்களைப் பெற்றுக்கொள்ளும் போது அவர்களின் முகங்களில் தோன்றிய சந்தோசமும் , கண்களில் இருந்து வந்த ஆனந்தக் கண்ணீரும் எம்மீதான வெறுப்புக்களை நீக்கி ரஸுலுல்லாஹி ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்கள் மீதான நேசத்தை அதிகரிக்கச் செய்யும் என்பதில் சந்தேகம் இல்லை.

"நபி துமா" என்று அவர்கள் அழைக்கும் ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்கள் இந்தத் தாய்மாரின் உள்ளங்களில் வாழ்ந்து கொண்டிருப்பார்கள்.

 தாய்மாருக்குத் தேவையான பொருட்களுக்கு மேலதிகமாக
 "இரண்டு வோட்" தொகுதிகளுக்கு அவசியமான பொருட்களையும் முஅஸ்கருர் றஹ்மான் மகளிர் அரபுக்கல்லூரி நிர்வாகத்தினர் வழங்கிவைத்தார்கள். 

மீலாதுன் நபி தினத்தில் இவ்வாறான முயற்சியை ஆரம்பிக்க வேண்டும் என்று பல வருடங்களாக ஆர்வம் காட்டிவந்தவர் ஹாபிழ் முர்ஷித் ஸஹீல் அவர்கள். 
தகவல் தொழில்நுட்பத்துறையில் இன்று  சிறந்த இடத்தில் இருப்பவர். அல்குர்ஆனை முழுமையாக மனனம் செய்தவர். மிக இளம் வயதை சேர்ந்தவர் ஹுஸ்னி, இல்ஹாம், அல்ஹாஜ் ரிஸ்வி,  முன்ஸிர், கல்லூரி அதிபர் உட்பட அனைவரும் பாராட்டுக்குரியவர்கள். 

ரஸுலுல்லாஹி ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்களை எவ்வாறு அறிமுகம் செய்ய வேண்டும் என்று கேட்டால் அதற்கு இந்த முயற்சியை உதாரணமாகக் காட்டுங்கள். மீலாதுன் நபி தினம் மேலும் உயிரோட்டம் பெறட்டுமாக.

(Fazhan Nawas)



மீலாதுன் நபி தினத்தையிட்டு கஹட்டோவிட "முஅஸ்கருர் றஹ்மான் மகளிர் அரபுக் கல்லூரி" ஒழுங்கு செய்த முன்மாதிரியான செயல். மீலாதுன் நபி தினத்தையிட்டு கஹட்டோவிட "முஅஸ்கருர் றஹ்மான் மகளிர் அரபுக் கல்லூரி" ஒழுங்கு செய்த முன்மாதிரியான  செயல். Reviewed by Madawala News on November 10, 2019 Rating: 5
'; (function() { var dsq = document.createElement('script'); dsq.type = 'text/javascript'; dsq.async = true; dsq.src = '//' + disqus_shortname + '.disqus.com/embed.js'; (document.getElementsByTagName('head')[0] || document.getElementsByTagName('body')[0]).appendChild(dsq); })();
Powered by Blogger.