பத்தொன்பதாம் திருத்தமும் அதன் சாபக்கேடுகளும்



கடந்த 2015ம் ஆண்டு மஹிந்த என்ட் கோவை சிம்மாசனத்திலிருந்து இறக்கி விட்டு மக்களின் அட்மோஸ்ட்
நம்பிக்கையோடு ஆட்சி பீடமேறிய நல்லாட்சி அரசின் இன்று வரையான செயற்பாடுகளை சற்று ஊன்றி அவதானித்தால் ஒரு விஷயம் புரிபடும். மாத்திரமன்றி கடந்த நல்லாட்சி முழுவதுமாக ஒரு தலையாட்டி பொம்மையைப் போல மைத்திரியை எப்படி ஆட்டி வைக்க முடிந்தது என்பதனையும் நாம் தெளிவாகத் தெரிந்து கொள்ளலாம். 

அதற்கெல்லாம் மாஸ்டர் மைன்டாக இருந்த ரணிலின் அதிகார வெறியும் பதவி மோகமும்தான் இதற்கு இந்த நாடு இது வரை கொடுத்த ரொம்ப ரொம்ப என்பதனை விடவும் அதற்கும் மேலான விலை. 

மைத்ரி ஜனாதிபதியானதும் ரணில் ஏற்கெனவே தான் போட்டு வைத்திருந்த நிகழ்ச்சி நிரலின் முதலாம் அம்சமான அரசியலமைப்புக்கு பத்தொன்பதாம் திருத்தத்தினை ஜனநாயகம் என்ற பெயரில் பெரும்பான்மை ஆசிர்வாதத்தோடு கொண்டு வந்தார். பத்தொன்பதாம் திருத்தத்தின் மூலம் அது வரைக்கும் இலங்கை ஜனாதிபதிக்கிருந்து வந்த பெரும்பாலான நிறைவேற்றுத் தத்துவ அதிகாரங்களை குறைத்து அவற்றை பிரதமரென்ற பொறுப்பின் கீழ் சுளுவாக எடுத்துக் கொண்டு ஜனாதிபதியை தன் சொல்லுக்கு ஆடுகின்ற பொம்மையாக்கி செல்லாக் காசாக்கினார். 

கடந்த நல்லாட்சியின் போது இலங்கையில் மக்கள் விரோத செயற்பாடுகளின் போதும் அதிலும் குறிப்பாக முஸ்லீம்களுக்கு எதிராக நடந்த முடிந்த அத்தனை இன வன்முறைகளின் போதும் ஒரு ஜனாதிபதி என்ற முறையில் தனிப்பட மைத்ரி முடிவெடுக்க முடியாமலும் பிரச்சினைகளின் போது தற்றுணிபினல் தீர்மானம் எடுக்க முடியாமலும் அவரை ஆக்கி வைத்திருந்தார்கள். மைத்ரியை ஒரு பொம்மையாகவும் கையாலாகத ஜனாதிபதியாகவும் மக்கள் முன்னே கொண்டு வரப்பட்டிருக்கின்ற இந்த பிம்பத்தை உருவாக்கியது அவரல்ல மாற்றமாக ரணிலும் இந்த பத்தொன்பதாம் திருத்தமுமே. 

ஒரு வேளை பத்தொன்பதாம் திருத்தம் கொண்டு வரப்படாமல் மைத்ரி எவரின் தலையீடு இல்லாத தான் மட்டுமே தீர்மானமெடுக்கின்ற தற்றுணிபுள்ள நிறைவேற்று அதிகாரத்தை கொண்டிருந்தால் நாட்டிலே நடை பெற்ற பல அனர்த்தங்களை அவரால் தவிர்த்திருக்க முடியும். 

மைத்ரி நல்ல மனுஷன்தான்…ஆனால் பத்தொன்பதாம் திருத்தம்….அதன் மீத வீறு கொண்டெழுந்த ரணில்…அவரைச் சுற்றி சிங்கியடித்த கூட்டம்….. மூலம் தந்திரமாக அவரது கையைக் கட்டிப்போட்டு சதிராட்டம் ஆடியிருக்கின்றார்கள். பாவம் மைத்ரியார்….கடந்த ஆட்சியின் போது முஸ்லீம்களுக்கெதிராக இடம் பெற்ற திகன, அம்பாறை, ஜிந்தோட்டை, மினுவாங்கொட, மற்றும் குருநாகல மெகா சைஸ் இன வன்முறைகளின் போது பத்தொன்பதாம் திருத்தம் மூலம் பவரை தங்கள் பக்கம் எடுத்துக் கொண்ட ரணில் என்ட் கோ நடந்த அத்தனை சம்பவங்களுக்கும் மஹிந்த என்ட் கோவே என்ற பழைய பஞ்சாங்களத்தை கூலாக பாடி விட்டு தமது சயன அறைகளில் ரெஸ்ட் எடுத்துக் கொண்டிருந்தார்கள். 

முக்கியமான அதிகாரங்கள் பிடுங்கப்பட்ட மைத்ரி தனியே எந்த முடிவுகளும் எடுக்க முடியாமல் கைகள் கட்டப்பட்ட நிலையிலேயே இருந்தார். இதோ இப்போது மறுபடியும் ஸ்டீரியோ டைப் மெலோ டிராமாவை ரணில் என்ட் கொ சஜீதை வைத்து நிகழ்த்த காத்திருக்கின்ற அபத்தம் இந்த ஜனாதிபதித் தேர்தலோடு ஆரம்பமாகியிருக்கின்றது. 

ஒரு வேளை சஜீத் வெற்றி பெற்று ஜனாதிபதியானாலும் கூட 2015ம் ஆண்டு மைத்ரியை பேருக்கு ஜனாதிபதியாக்கி பத்தொன்பதாம் திருத்தத்தை கொண்டு வந்து அதன் மூலம் எப்படி செல்லாக் காசாக்கி கதகளி ஆடினார்களோ அதே போலத்தான் இப்போதும். சந்தேகமே தேவையில்லை சஜீதை இன்னொரு மைத்ரியாக்கி என்பதனை விடவும், அதுக்கும் மேலேயாக்கி பிரதமராக வருகின்ற ரணிலும் அல்லது ரணிலுக்கு பதிலாக வருகின்ற பாட்டாளி சம்பிக்கவும் (சஜீத் ஜனாதிபதி எனில் ரணில்தான் பிரதமர் என்பது சர்வ நிச்சயம்) குருஷேத்திரம் ஆடுவார்கள். அப்போது நிறைவேற்றுத்தத்துவங்கள் குறைக்கப்பட்ட சஜீதும் மைத்ரி போல தன்னால் எதுவுமே செய்ய முயடிவில்லையே என்று தலையில் கை வைத்துக் கொண்டு கதறுவார். 

இது நடக்கும். 

பத்தொன்பதாம் திருத்தம் என்பதே நாட்டுக்கு பெருஞ்சாபக்கேடு. அதுவும் ரணில் மாதிரி ஆட்களிடம் அது அகப்படுகின்ற போது அது சர்வ நாசகாரியாக மாறி விடுகின்றது. பத்தொன்பதாம் திருத்தத்தை ஒரு சில அவசிய திருத்தங்களோடு இடத்தை காலி பண்ண வேண்டிய பெருந்தேவை இலங்கைக்கு இருக்கின்றது. இல்லாவிடில் தெமாடரும் இழுபறிகள்….மல்யுத்தங்கள்…..மக்கள் பலிக்கடாக்கள். 

கிண்ணியா சபருள்ளாஹ் 
2019-11-12
பத்தொன்பதாம் திருத்தமும் அதன் சாபக்கேடுகளும் பத்தொன்பதாம் திருத்தமும் அதன் சாபக்கேடுகளும் Reviewed by Madawala News on November 12, 2019 Rating: 5
'; (function() { var dsq = document.createElement('script'); dsq.type = 'text/javascript'; dsq.async = true; dsq.src = '//' + disqus_shortname + '.disqus.com/embed.js'; (document.getElementsByTagName('head')[0] || document.getElementsByTagName('body')[0]).appendChild(dsq); })();
Powered by Blogger.