நாட்டில் தினமும் சுமார் 658 சட்டவிரோத கருகலைப்பு சம்பவங்கள் இடம் பெறுகின்றன.



நாட்டில் தினமும் சுமார் 658 சட்டவிரோத கருகலைப்பு சம்பவங்கள்
 இடம்பெறுவது தொடர்பில் அறிய முடிவதாக தேசிய மக்கள் சக்தியின் ஜனாதிபதி வேட்பாளர் அநுரகுமார திசாநாயக்க தெரிவித்துள்ளார்.



கம்பஹா பஸ் தரிப்பிட வளாகத்தில் நேற்று (10) நடைபெற்ற தேர்தல் பிரச்சார கூட்டத்தில் உரையாற்றிய போதே அவர் இதனை கூறினார்.



அங்கு தொடர்ந்தும் உரையாற்றிய அவர் தற்போதைய சூழலில் பெண்களின் பாதுகாப்பு பாரிய அச்சுறுத்தலுக்கு உள்ளாகி உள்ளதாக குறிப்பிட்டார்.


மேலும் தற்போதைய நிலையில் பெண்கள் பல்வேறு பிரச்சினைகளுக்கு முகம்கொடுத்துள்ளதாக அவர் கூறினார்.
பொது போக்குவரத்தை பயன்படுத்தும் 90 வீதமான பெண்கள் சாதாரணமாக ஒரு முறையேனும் பாலியல் தொந்தரவுக்கு முகம் கொடுப்பதாக ரூகுணு பல்கலைக்கழகத்தின் அண்மைகால ஆய்வில் தெரிவிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.


அதேபோல் 70 வீதமான பெண்கள் உடல் நீதியான பாலியல் தொல்லைகளை எதிர்கொள்வதாகவும் அந்த ஆய்வில் கண்டறியப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.



எமது புதல்விகள் உள்ளிட்ட சகோதரிகளுக்கு பஸ் வண்டியில் சுதந்திரமாக பயணிக்க முடிவதில்லை என தெரிவித்த அவர் அவ்வாறான நிலைமையை கொண்ட நாடு அவசியாமானதா எனவும் கேள்வி எழுப்பினார்.
அரச அலுவலகங்களிலோ அல்லது தனியார் அலுவகங்களிலோ தொழில் புரியும் பெண்களுக்கு பாலியல் தொந்தரவுகள் இடம்பெற்று வருவதாகவும் அவ்வாறு விடுக்கப்படும் அழுத்தங்களுக்கு அடிப்பணியாத சந்தர்பத்தில் அவர்கள் தொழில் ரீதியான பழிவாங்கப்படுவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.



71 வருடங்களுக்கு மேலாக நாட்டை ஆண்ட பிரதான கட்சிகள் பெண்களுக்காக ஒரு சுகாதாரமான பொது மலசலக்கூடத்தை கூட அமைக்கவில்லை எனவும் அவர் குறிப்பிட்டார்.



கர்ப்பபை புற்றுநோய் ஏற்படுவதற்கு பாதுகாப்பான மலசலகூட வசிகதில் இல்லாமை பிரதான காரணம் என தெரிவித்த அவர், அண்மையில் வெளியான ஆய்வு ஒன்றில் நாட்டில் தினமும் சுமார் 658 சட்டவிரோத கருகலைப்பு சம்பவங்கள் இடம்பெறுவதாக அறிய கிடைப்பதாகவும் தெரிவித்தார்.


எனவே இவ்வாறான பிரச்சினைகள் மூலம் நாட்டின் பெண்கள் எந்தளவு பாதிக்கப்படுகின்றார்கள்? எனவும் தேசிய மக்கள் சக்தியின் ஜனாதிபதி வேட்பாளர் அநுரகுமார திசாநாயக்க கேள்வி எழுப்பினார்.
நாட்டில் தினமும் சுமார் 658 சட்டவிரோத கருகலைப்பு சம்பவங்கள் இடம் பெறுகின்றன. நாட்டில் தினமும் சுமார் 658 சட்டவிரோத கருகலைப்பு சம்பவங்கள் இடம் பெறுகின்றன. Reviewed by Madawala News on November 12, 2019 Rating: 5
'; (function() { var dsq = document.createElement('script'); dsq.type = 'text/javascript'; dsq.async = true; dsq.src = '//' + disqus_shortname + '.disqus.com/embed.js'; (document.getElementsByTagName('head')[0] || document.getElementsByTagName('body')[0]).appendChild(dsq); })();
Powered by Blogger.