முன்னெடுத்த வேலைத்திட்டத்தின் பயனாக இலங்கை போலீஸ் துறைக்கு 62 கோடி 50 லட்சம் ரூபா வருமானம்.


மதுபோதையில் வாகனம் செலுத்துபவர்களை கைது செய்வதற்கு பொலிஸார் முன்னெடுத்த வேலைத்திட்டத்தின்
பயனாக கடந்த நான்கு மாத காலத்துக்குள் 62 கோடியே 50 லட்சம் ரூபா வருமானம் கிடைக்கப் பெற்றுள்ளதாக பொலிஸ் போக்குவரத்துப் பிரிவின் பணிப்பாளர் சிரேஸ்ட பொலிஸ் அதிகாரி இந்திக ஹபுகொட தெரிவித்துள்ளார்.

கடந்த ஜூலை மாதம் 05 ஆம் திகதி இந்த நடவடிக்கை நாடளாவிய ரீதியில் முன்னெடுக்கப்பட்டதாகவும் தற்பொழுதும் அது நடைமுறையில் உள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

இந்த விசேட நடவடிக்கையில் நேற்று (14) வரையில் 25 ஆயிரம் மதுபோதையில் வாகனம் செலுத்திய சாரதிகள் கைது செய்யப்பட்டுள்ளனர். இவர்கள் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட போது குறைந்த பட்சம் ஒருவரிடம் 25 ஆயிரம் ரூபா தண்டப் பணம் அறவிடப்பட்டுள்ளதாகவும் சிரேஸ்ட பொலிஸ் அதிகாரி சுட்டிக்காட்டியுள்ளார்.

இந்த நடவடிக்கை மிகவும் வெற்றிகரமாக முன்னெடுக்கப்படுவதனால், தொடர்ந்தும் இதனை முன்னெடுத்துச் செல்ல தீர்மானித்துள்ளதாகவும் அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார். D C
முன்னெடுத்த வேலைத்திட்டத்தின் பயனாக இலங்கை போலீஸ் துறைக்கு 62 கோடி 50 லட்சம் ரூபா வருமானம். முன்னெடுத்த வேலைத்திட்டத்தின் பயனாக இலங்கை போலீஸ் துறைக்கு 62 கோடி 50 லட்சம் ரூபா வருமானம். Reviewed by Madawala News on November 15, 2019 Rating: 5
'; (function() { var dsq = document.createElement('script'); dsq.type = 'text/javascript'; dsq.async = true; dsq.src = '//' + disqus_shortname + '.disqus.com/embed.js'; (document.getElementsByTagName('head')[0] || document.getElementsByTagName('body')[0]).appendChild(dsq); })();
Powered by Blogger.