அரபு மத்ரஸாவுக்காக நிதி சேகரித்த 5 பேர் கைது ! - Madawala News Number 1 Tamil website from Srilanka

அரபு மத்ரஸாவுக்காக நிதி சேகரித்த 5 பேர் கைது !கிழக்கு மாகாண திருகோணமலை பிரதேசத்தில் அமைக்கப்பட்டு வரும் அரபு மத்ரஸா பாடசாலையொன்றுக்கு நிதி சேகரிப்பில் ஈடுபட்ட ஐவர் வேனுடன் வெலிமட குருதலாவ பிரதேசத்தில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளதாக போகஹகும்புர பொலிஸார் தெரிவித்துள்ளனர்.


நேற்று முன்தினம் இரவு (10) இவர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக இன்றைய சகோதர தேசிய நாளிதழொன்று அறிவித்துள்ளது.


திருகோணலை கிண்ணியா பிரதேசத்தில் வசிக்கும் மூவரும், ஹொரவ்பொத்தானையைச் சேர்ந்த ஒருவரும், மரதன்கடவலையைச் சேர்ந்த ஒருவருமே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளனர். நிதி சேகரிப்பில் ஈடுபட்டுக் கொண்டிருக்கும் போது இவர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாகவே தெரிவிக்கப்படுகின்றது.


இவர்கள் 31, 28, 27, 33 மற்றும் 29 வயதை உடையவர்கள் எனவும் பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்..


இவர்கள் வெலிமட போகஹகும்புர, குருதலாவ பிரதேசத்தில் அரபு மத்ரஸா ஒன்றுக்காக நிதி சேகரிப்பில் இருப்பதாக போகஹகும்புர பொலிஸாருக்கு கிடைத்த தகவல் ஒன்றின் பேரில் போகஹகும்புர பொலிஸ் குழுவினால் அன்றைய தினம் இரவே கைது செய்யப்பட்டுள்ளதாகவும் அச்செய்தியில் மேலும் கூறப்பட்டுள்ளது. 

அரபு மத்ரஸாவுக்காக நிதி சேகரித்த 5 பேர் கைது ! அரபு மத்ரஸாவுக்காக நிதி சேகரித்த 5 பேர் கைது ! Reviewed by Madawala News on October 12, 2019 Rating: 5