VIDEO இணைப்பு : 10 நிமிட நேரத்தில் புதிய களனிப் பாலத்திலிருந்து கொழும்பு நகரை அடையலாம்.


கொழும்பு - கட்டுநாயக்க அதிவேக நெடுஞ்சாலையில் புதிய களனிப் பாலத்தின் கட்டுமானப்
பணிகளை அமைச்சர் கபீர் ஹாஷிம் (08) பார்வையிட்டார்.


   கொழும்பு மற்றும் அதன் புறநகர்ப் பகுதிகளில் கடும் போக்குவரத்து நெரிசலைக் குறைக்கும் நோக்கில் “புதிய களனிப் பாலம் திட்டம்” நெடுஞ்சாலை மற்றும் பெட்ரோலிய வள அமைச்சு மற்றும் வீதி அபிவிருத்தி அதிகார சபையினால் செயற்படுத்தப்படுகிறது.


   புதிய பாலம் 6 வழிப்பாதைகளைக் கொண்ட 380 மீட்டர் நீளமுடையதாகவும் 27.5 மீட்டர் அகலத்தைக் கொண்டதாகவும் அமைக்கப்படுகின்றது.
இந்தத் திட்டத்திற்கு ஜப்பான் சர்வதேச ஒத்துழைப்பு நிறுவனம் (JICA) நிதியளித்துள்ளது.


   இந்த விஜயத்தின்போது அமைச்சர் கபீர் ஹாஷிம் கருத்துத் தெரிவித்ததாவது,

    "இந்தத் திட்டம் மிக முக்கியமான திட்டமாகும். 2017 ஆம் ஆண்டில் இந்தத் திட்டத்தின் தொடக்கத்தில், ஒரு அரசாங்கமாக, மனிதாபிமானப் பணிகளுக்கு முன்னுரிமை அளித்தோம்.


   வீடற்ற மற்றும் நிலமற்ற 400 இக்கும் மேற்பட்ட குடும்பங்களுக்கு மாற்று வீடுகளை வழங்கினோம். இந்தத் திட்டத்தின் காரணமாக, கட்டிடங்களை இழக்கும் அரச நிறுவனங்களுக்கான மாற்றுக் கட்டிடங்களையும் நாம் கட்டினோம். இவற்றை முடித்த பின்னர்தான் நாம் இத்திட்டத்தைத் தொடங்கினோம்.


   இந்தத் திட்டத்தில் 5,500 கோடி ரூபா முதலீடு செய்யப்பட்டது. இலங்கை அரசு சார்பாக, ஜிகா மற்றும் ஜப்பான் அரசாங்கத்திற்கு எனது மனமார்ந்த நன்றிகளைத்  தெரிவித்துக் கொள்கிறேன்.


   இலங்கை பொறியாளர்கள் இந்தத் திட்டத்தை ஆதரிக்கின்றனர். 2020 ஆம் ஆண்டளவில், இந்தத் திட்டம் கொழும்பில் போக்குவரத்து நெரிசலைக் குறைக்க உதவும். இது 10 நிமிட நேரத்தில் புதிய களனிப் பாலத்திலிருந்து கொழும்பு நகரத்தை அடைய உதவும்.


   போக்குவரத்து நெரிசலைக் குறைப்பது, சுற்றுச்சூழல் மாசுபாட்டையும் எரிபொருள் விரயத்தையும் குறைக்க உதவுகிறது. இது இலங்கையர்களாகிய எங்களுக்கு ஒரு பெரிய சாதனை" என்று அமைச்சர் சுட்டிக்காட்டினார்.
( ஐ. ஏ. காதிர் கான் )

VIDEO இணைப்பு : 10 நிமிட நேரத்தில் புதிய களனிப் பாலத்திலிருந்து கொழும்பு நகரை அடையலாம். VIDEO இணைப்பு :  10 நிமிட நேரத்தில் புதிய களனிப் பாலத்திலிருந்து கொழும்பு நகரை அடையலாம். Reviewed by Madawala News on October 09, 2019 Rating: 5
'; (function() { var dsq = document.createElement('script'); dsq.type = 'text/javascript'; dsq.async = true; dsq.src = '//' + disqus_shortname + '.disqus.com/embed.js'; (document.getElementsByTagName('head')[0] || document.getElementsByTagName('body')[0]).appendChild(dsq); })();
Powered by Blogger.