கோட்டாபய ராஜபக்ஷ ஜனாதிபதியாக தெரிவானால், முன்பு தமிழ், முஸ்லிம் மக்களுக்கு நேர்ந்தவைகள் மீண்டும் இடம்பெறும்.


மடூல்சீமை பகுதியில் பல்கலைக்கழகம் ஒன்றை அமைத்து தருமாறு புதிய ஜனநாயக முன்னணியின் ஜனாதிபதி
வேட்பாளர் சஜித் பிரேமதாசவிடம் ​கோரிக்கை ஒன்றை முன்வைத்துள்ளதாக இராஜாங்க அமைச்சர் வடிவேல் சுரேஸ் தெரிவித்துள்ளார்.

மடூல்சீமை நகரில் புதிய ஜனநாயக முன்னணியின் தேர்தல் காரியாலயத்தை திறந்து வைக்கும் நிகழ்வு கலந்துக் கொண்டு உரையாற்றும் போதே அவர் இதனை கூறியுள்ளார்.

இந்த நிகழ்வில் தொடர்ந்தும் உரையாற்றிய அவர், மடூல்சீமை பகுதி மக்களின் வாக்குகளை கொள்ளையிட பாரிய செயற்றிட்டம் ஒன்றை எதிர்கட்சிகள் நடைமுறைபடுத்தி வருவதாக கூறினார்.

சகோதர மொழி மக்களுக்கு சஜித் பிரேமதாச ஜனாதிபதியாக வரவேண்டும் என்ற எண்ணம் இருந்தாலும் தமிழ், முஸ்லிம் மக்களை பொறுத்த வரையில் அவர் கட்டாயம் ஜனாதிபதியாக வேண்டிய அவசியம் இருப்பதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.

அதேபோல் கோட்டாபய ராஜபக்ஷ ஜனாதிபதியாக தெரிவானால் முன்பு தமிழ், முஸ்லிம் மக்களுக்கு நேர்ந்தவைகள் மீண்டும் தொடர்ந்து இடம்பெறுவதை எவரும் தடுக்க முடியாது எனவும் இராஜாங்க அமைச்சர் வடிவேல் சுரேஸ் மேலும் தெரிவித்துள்ளார்.
கோட்டாபய ராஜபக்ஷ ஜனாதிபதியாக தெரிவானால், முன்பு தமிழ், முஸ்லிம் மக்களுக்கு நேர்ந்தவைகள் மீண்டும் இடம்பெறும். கோட்டாபய ராஜபக்ஷ ஜனாதிபதியாக தெரிவானால், முன்பு  தமிழ், முஸ்லிம் மக்களுக்கு நேர்ந்தவைகள் மீண்டும் இடம்பெறும். Reviewed by Madawala News on October 18, 2019 Rating: 5
'; (function() { var dsq = document.createElement('script'); dsq.type = 'text/javascript'; dsq.async = true; dsq.src = '//' + disqus_shortname + '.disqus.com/embed.js'; (document.getElementsByTagName('head')[0] || document.getElementsByTagName('body')[0]).appendChild(dsq); })();
Powered by Blogger.