ஊவா முஸ்லிம் பாடசாலைகளை புறக்கணித்து செயல் பட முடியாது ! அ இ ஜ உ பதுளை கிளையின் முயற்சிக்கு கைமேல் பலன்.

 (அபூ ஷிபா – பதுளை )        
     கடந்த ஊவா மாகாண சபையில் தமிழ் கல்வியமைச்சு தனியாக வேறுபிரித்து 
நடைமுறைபடுத்தப் பட்டு வந்த நிலையில் தமிழ் மொழி மூல  முஸ்லிம் பாடசாலைகள் சிங்கள கல்வியமைச்சின் கீழ் இயங்கி வந்தது. பல்வேறு நிர்வாக சிக்கல்களுக்கு ஊவா முஸ்லிம் பாடசாலைகள் முகம் கொடுத்து வந்த நிலையில், மத்திய  அரசின் புதிய கல்வி சீர்த்திருத்தக் கொள்கையின் ஒரு செயற்பாடாக தேசிய ரீதியில் 98 ஆக உள்ள வலயக்கல்விக் காரியாலயங்களை 200 ஆக அதிகரிப்பதற்கான  முயற்சிகளை  முன்னெடுத்து இருந்தது. 
   
   
குறித்த இந்த நிர்வாகரீதியிலான மாற்றங்களினூடாக  ஊவாவில் நான்கு தனித் தமிழ் கல்விவலயங்கள் உருவாக்கப் பட வேண்டும் என்று கோரிக்கை முன்வைக்கப் பட்டு கடந்த மாகாண சபையின் இறுதி அமைச்சரவை கூட்டத்தில் சமர்பித்து அதற்கான அமைச்சரவை அங்கீகாரத்தை பெறுவதற்கான நடவடிக்கைகளை ஊவா மாகாண தமிழ் கல்வி அமைச்சர் செந்தில் தொண்டமான் அவர்களால் முன்னெடுக்கப் பட்டு வந்தது.  


அதில் , ......
1. ஹல்துமுல்லை – ஹப்புத்தளை தமிழ்க்கல்வி வலயம்
2. பண்டாரவளை – வெளிமடை தமிழ்க்கல்வி வலயம்
3. பதுளை – ஹாலிஎல தமிழ்க்கல்வி வலயம்
4. பசறை – லுணகலை தமிழ்க்கல்வி வலயம்
    ஆகியன குறிப்பிட்ட உத்தேச தனித் தமிழ் கல்வி வலயங்களாகும்.             உண்மையில் ஊவா மாகாணத்தில்  கடந்த கால அரசியல் சமூக நகர்வுகளில் தமிழ் முஸ்லிம் சமூகங்கள் துருவப் பட்டு செயற்பட்ட கசப்பான பல அனுபவங்கள் எம்மத்தியில் உள்ளன. குறிப்பாக கடந்த 2005 ம் ஆண்டு வழங்கப் பட்ட மலையக தமிழ் மொழிமூல ஆசிரிய நியமனங்களில் குறித்த நிலை உருவானதை யாராலும் மறுக்க முடியாது.

  இந் நிலைமைகளுக்கான முக்கிய காரணம் ஊவாவில் அல்லது மலையகத்தில் தமிழ் பேசும் இன்னொரு சிரும்பான்மையான முஸ்லிம் சமூகம் குறித்த மேட்போன்ற திட்டங்களின் மூலம் நேரடியாக பாதிக்கப் படுகின்றதொரு சமூகமாக உள்ளதாகும். கல்வித்துறையின் முதுகெலும்பாக கருதப் படக் கூடிய ஆசிரிய சமூகத்தின் , அதிபர்மார்களின் , கல்விசார்/ கல்விசாரா ஊழியர்களின் தொழில் ரீதியிலான அனைத்து அடிப்படை விடயங்களும் பொதுவாக  கல்வி வலயங்களின் ஊடாகத் தான் முன்னெடுக்கப் படுகின்றன. அத்துடன் கல்வி சார் அபிவிருத்தி திட்டங்கள் , மற்றும் கல்வி கொள்கை வகுப்புக்கள் அமுல் நடத்தப்  படுதல் போன்ற இன்னோரன்ன விடயங்கள் இக்கல்விவலயங்களின் ஊடாகத் தான் முன்னெடுக்கப் படுகின்றன. 


      “ இதன் ஆழ அகலங்களை அறிந்து  குறித்த விடயத்தில் திருத்தங்கள் ஆலோசனைகள் முன்வைக்கப் பட்டு குறித்த அபிவிருத்தி திட்டங்கள் நடைமுறைப் படுத்தப் பட்டால் சமூக விரிசல்கள் ஏற்படாமல் ஒருமித்த செயற்பாடுகளை முன்னெடுக்கலாம் “ என்ற சிந்தனையின் அடிப்படையில் அகில இலங்கை ஜம்மியத்துல் உலமாவின் பாதுளைக் கிளையின் தலைமையின் கீழ் பல காத்திரமான முன்னெடுப்புகள் மேற்கொள்ளப் பட்டு வந்தது.


 குறிப்பாக சம்பந்தப் பட்ட தரப்பினருடன் நேரடி பேச்சுவார்த்தைகளை நடத்தி முஸ்லிம்கள்  பக்கமுள்ள நியாயங்களை முன்வைத்து சாதகமான தீர்வுகளை வேண்டி நின்றது. அதற்கிணங்க கடந்த ஊவா மாகாண சபையின் இறுதி அமைச்சரவை கூட்டத்தில் சமர்பிக்கப் படவிருந்த  குறித்த அமைச்சரவை பத்திரம் சமர்பிக்கப் படாது இனிவரும் மாகாண சபையின் ஆரம்ப அமைச்சரவைக்கு சமர்பிக்க நவடிக்கை எடுப்பதாக சம்பந்தப் பட்ட தரப்பினரால் அறிவிக்கப் பட்டுள்ளது. அத்துடன் குறிபிட்ட தனித் தமிழ் கல்வி வலய கோரிக்கையை தமது அரசியல் கோரிக்கையாக முன்வைத்து அடுத்து வரும் தேர்தல்களில் அரசியல் நகர்வுகளை முன்னெடுக்கவுள்ளதாகவும் சம்பந்தப் பட்டவர்கள் அறிவித்துள்ளார்கள் .
ஊவா முஸ்லிம் பாடசாலைகளை புறக்கணித்து செயல் பட முடியாது ! அ இ ஜ உ பதுளை கிளையின் முயற்சிக்கு கைமேல் பலன். ஊவா முஸ்லிம் பாடசாலைகளை புறக்கணித்து செயல் பட முடியாது ! அ இ ஜ உ பதுளை கிளையின் முயற்சிக்கு கைமேல் பலன். Reviewed by Madawala News on October 09, 2019 Rating: 5